மருத்துவமனையில் காத்திருப்போர் அறை அருகே கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் மக்கள் அவதி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்போர் அருகே கொட்டப்படும் உணவு பொருட்கள் கழிவால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனாவுக்கு முன், தினந்தோறும் உள் மற்றும் புற நோயாளிகளாக, 5,000க்கும் மேற்பட்டோர் வந்து சென்றனர்.

தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காத்திருப்போர் அருகே கொட்டப்படும் உணவு பொருட்கள் கழிவால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.


தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனாவுக்கு முன், தினந்தோறும் உள் மற்றும் புற நோயாளிகளாக, 5,000க்கும் மேற்பட்டோர் வந்து சென்றனர். கொரோனா தொற்று பீதியால் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சை மட்டும் இன்றி, சளி, காய்ச்சல், பிரசவம் உள்ளிட்டவைக்கும் சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். தற்போது, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு, தர்மபுரி மட்டும் இன்றி, அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கால், தனியார் லாட்ஜ்சுகள் மூடப்பட்டுள்ளதால், நோயாளிகளுடன் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு வருபவர்கள், மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறையில் காத்துள்ளனர். கடந்த சில தினங்களாக, இந்த காத்திருப்பு அறை, மன நல உள்நோயாளிகள் பிரிவு கட்டடங்களுக்கு இடையில், உணவு கழிவு பொருட்கள், மருத்துவ கழிவு பொருட்கள் அதிகளவில் கொட்டப்பட்டுகின்றன. இதை தினந்தோறும் அகற்ற, மருத்துவக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், துர்நாற்றம் வீசுகிறது. காத்திருப்போர் அறைக்கு வரும் பொதுமக்கள் மட்டும் இன்றி அருகே உள்ள மகப்பேறு பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களும் தொற்று பரவும் நிலை உருவாகியுள்ளது. மருத்துவக்கல்லூரி நிர்வாகம், இப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு பொருட்களை விரைந்து அகற்றுவதுடன், கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X