சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரியல் எஸ்டேட் அதிபர் மீது தாக்குதல்: கும்பலுக்கு வலை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் அருகே, ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ஓசூர் அடுத்த பாகலூர் அருகே உள்ள முகலுப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமப்பா, 49; ரியல் எஸ்டேட் அதிபர். இவரை நேற்று முன்தினம் மதியம் மொபைல்போனில் தொடர்பு கொண்டவர், தனக்கு விலைக்கு நிலம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் அவருக்கு நிலத்தை காட்டுவதற்காக, முகலுப்பள்ளி எல்லம்மா கோவில் அருகே வருமாறு

ஓசூர்: ஓசூர் அருகே, ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ஓசூர் அடுத்த பாகலூர் அருகே உள்ள முகலுப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமப்பா, 49; ரியல் எஸ்டேட் அதிபர். இவரை நேற்று முன்தினம் மதியம் மொபைல்போனில் தொடர்பு கொண்டவர், தனக்கு விலைக்கு நிலம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் அவருக்கு நிலத்தை காட்டுவதற்காக, முகலுப்பள்ளி எல்லம்மா கோவில் அருகே வருமாறு கூறிய லட்சுமப்பா, அவருக்காக அங்கு காத்திருந்தார். அப்போது அங்கு வந்த இரு வாலிபர்கள், லட்சுமப்பாவை இரும்பு கம்பியால் பலமாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக, லட்சுமப்பா கொடுத்த புகாரின்படி, பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், 10 ஆண்டுக்கு முன், லட்சுமப்பாவிற்கும், அவரது மனைவி வித்யா, 35, என்பவருக்கும் விவாகரத்து நடந்தது தெரிந்தது. அவரது தூண்டுதலால் லட்சுமப்பா தாக்கப்பட்டாரா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X