பொது செய்தி

தமிழ்நாடு

சிமென்ட் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் முடக்கம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
-நமது நிருபர்-தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் சிமென்ட் விலை 500 ரூபாயாக உயர்ந்ததால் கட்டுமானப் பணிகள் முடங்கிப் போனது.தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தேர்தலுக்கு முன் 'ஏ கிரேடு' சிமென்ட் ஒரு மூட்டை 435 ரூபாய்க்கும், 'பி கிரேடு' 380, 'சி கிரேடு' 330 ரூபாய்க்கும் விற்பனையானது. இது ஏப்ரல் மாதத்தில் முறையே 460, 405, 355 ரூபாய் எனவும், மே மாதத்தில் 475, 420, 360 ரூபாய் என

-நமது நிருபர்-

தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் சிமென்ட் விலை 500 ரூபாயாக உயர்ந்ததால் கட்டுமானப் பணிகள் முடங்கிப் போனது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் தேர்தலுக்கு முன் 'ஏ கிரேடு' சிமென்ட் ஒரு மூட்டை 435 ரூபாய்க்கும், 'பி கிரேடு' 380, 'சி கிரேடு' 330 ரூபாய்க்கும் விற்பனையானது. இது ஏப்ரல் மாதத்தில் முறையே 460, 405, 355 ரூபாய் எனவும், மே மாதத்தில் 475, 420, 360 ரூபாய் என விற்பனையானது.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் 'ஏ கிரேடு' 495 ரூபாய், 'பி கிரேடு' 450,'சி கிரேடு' 400 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு தாங்கள் துவங்கியுள்ள கனவு இல்லத்தை தொடர முடியாமல் உள்ளனர்.

கொரோனா கால ஊரடங்கில் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில் திடீர் விலை உயர்வு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் சிமென்ட் விலை உயர்வு பாதிப்பு குறித்து சென்னை முதல் தர ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில் செல்வராஜ் என்பவர் சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்தார்.

விலை உயர்வு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டது, இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ., தனது விசாரணையைத் துவங்கியுள்ளது.இந்நிலையில், மீண்டும் விலை உயர்வு அறிவிப்பால் பொதுமக்கள், ஆளும் கட்சியினர் மீது அதிருப்தியில் உள்ளனர். இதே போன்று மணல், ஜல்லி, கம்பி ஆகியவற்றின் விலைகளும் கடந்த மாதங்களைக் காட்டிலும் இம் மாதம் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இதுகுறித்து கட்டுமான ஒப்பந்ததாரர்கள் கூறுகையில்,

'சிமென்ட் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஒன்றிணைந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் இரு முறை விலையேற்றி உள்ளனர். இது செயற்கையாக ஏற்றப்பட்ட விலை உயர்வாகும். கொரோனா காலத்தில் பொதுமக்கள் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர்களும் பொருளாதார ரீதியாக நொடிந்து போய் உள்ளனர். இந்நிலையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் முக்கியமான கடமையாகும். தமிழக முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்' என்றார்.

தமிழகத்தில் நல்லது நடக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு, சிமென்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X