சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளியில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் அறையிலிருந்த, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரைச் சேர்ந்தவர் லியோனி, 55; கந்திக்குப்பம் அடுத்த அஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 8ல் அஞ்சூர் அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் ஜன்னல்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் அறையிலிருந்த, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.


கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகரைச் சேர்ந்தவர் லியோனி, 55; கந்திக்குப்பம் அடுத்த அஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த, 8ல் அஞ்சூர் அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், லியோனி பள்ளிக்கு சென்று பார்வையிட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தலைமை ஆசிரியர் அறையை திறந்து பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. 3 புரொஜெக்டர்கள் , ஆம்பிளிபயர், 2 தெர்மல் ஸ்கேனர்,3 ஆக்சி மீட்டர், உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதன் மொத்த மதிப்பு, 50 ஆயிரம் ரூபாய். கந்திக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X