சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபானம் கடத்திய 5 பேர் கைது; 403 பாக்கெட் பறிமுதல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டை பகுதியில் மதுபானம் கடத்திய, 5 பேரை கைது செய்த போலீசார், 403 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஸ்டேஷன் போலீசார், கனமனபள்ளி, கும்மளாபுரம், ஜவளகிரி ஆகிய பகுதிகளில் நடத்திய வாகன சோதனையில், கர்நாடகா மதுபானம் கடத்தி சென்ற, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த தாசம்பட்டியை சேர்ந்த லோகநாதன், 24, தேன்கனிக்கோட்டை அடுத்த

ஓசூர்: தேன்கனிக்கோட்டை பகுதியில் மதுபானம் கடத்திய, 5 பேரை கைது செய்த போலீசார், 403 மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஸ்டேஷன் போலீசார், கனமனபள்ளி, கும்மளாபுரம், ஜவளகிரி ஆகிய பகுதிகளில் நடத்திய வாகன சோதனையில், கர்நாடகா மதுபானம் கடத்தி சென்ற, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த தாசம்பட்டியை சேர்ந்த லோகநாதன், 24, தேன்கனிக்கோட்டை அடுத்த சம்பந்தகோட்டையை சேர்ந்த ஆஞ்சி, 22, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அடுத்த கொல்லஹள்ளியை சேர்ந்த மோகன், 23, கிருஷ்ணகிரி அடுத்த பெரியகோட்டப்பள்ளியை சேர்ந்த ஆனந்தன், 29, ஆகிய, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், தேன்கனிக்கோட்டை போலீசார் நடத்திய வாகன சோதனையில், கிரியனப்பள்ளியை சேர்ந்த கணேஷ், 38, கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து, 203 மதுபாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அஞ்செட்டி போலீசார், உரிகம் சாலையில் ரோந்து சென்ற போது, டிரைவர் இல்லாமல் நின்று கொண்டிருந்த மாருதி ஸ்விப்ட் காரில் சோதனை செய்தனர். அதில், 200 மதுபாக்கெட்டுகள் இருந்ததால், காருடன் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X