பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வசூலிக்க கடின போக்கை கடைபிடிக்கக்கூடாது: கலெக்டர்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ''தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் பெற்ற கடன்களை வசூல் செய்ய கடின போக்கை கடைபிடிக்கக்கூடாது,'' என, கலெக்டர் ஜெயசந்திர பானு பேசினார்.கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர்

கிருஷ்ணகிரி: ''தனியார் நிதி நிறுவனங்கள் பொதுமக்கள் பெற்ற கடன்களை வசூல் செய்ய கடின போக்கை கடைபிடிக்கக்கூடாது,'' என, கலெக்டர் ஜெயசந்திர பானு பேசினார்.


கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில், வங்கியாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மே, 10 முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், தனியார் நிதி நிறுவனங்கள் தங்களிடம் பொதுமக்கள் பெற்ற கடன்களை வசூல் செய்யும் போது கடின போக்கை தவிர்க்க வேண்டும். ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன்களுக்கான கொரோனா நோய்த்தொற்று கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் தகுதியான விவசாயக் கடன்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திருமாவளவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன் உள்பட அனைத்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X