பொது செய்தி

தமிழ்நாடு

பாரூர் பெரிய ஏரிக்கு கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: பாரூர் பெரிய ஏரிக்கு, கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும் கர்நாடகா மாநிலத்திலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த மூன்று நாட்களாக, 560 கன அடிநீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: பாரூர் பெரிய ஏரிக்கு, கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும் கர்நாடகா மாநிலத்திலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த மூன்று நாட்களாக, 560 கன அடிநீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று முன்தினம், 470 கன அடியும், நேற்று, 348 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, பாரூர் பெரிய ஏரிக்கு முதல்போக சாகுபடிக்கு, 240 மில்லியன் கன அடி தண்ணீரும், இரண்டாம் போகத்திற்கு, 240 மில்லியன் கன அடி தண்ணீரும் முன்னுரிமை அடிப்படையில் திறந்துவிட வேண்டும். அதன்பின்னரே கே.ஆர்.பி., அணை வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று அணைக்கு வந்து கொண்டிருந்த, 348 கன அடி தண்ணீர் சிறிய மதகின் மூலம் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. பாரூர் ஏரி நிரம்பிய பின்னர் கே.ஆர்.பி., அணை பாசன விவசாயிகளுக்கு முதல்போகத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X