பொது செய்தி

தமிழ்நாடு

180 நரிக்குறவர் குடும்பங்களுக்கு உணவு பொருள்: புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வினியோகம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஓசூர்: சூளகிரி அருகே நரிக்குறவர் குடும்பங்களுக்கு, வையகம் பவுண்டேசன் சார்பில் தலா, 25 கிலோ அரிசியை, புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வழங்கினார்.சூளகிரி ஒன்றியம், நெரிகம் பஞ்., உட்பட்ட கரியசந்திரம் கிராமத்தில், 180 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள், ஊசி, பாசி, மாலை உள்ளிட்டவற்றை தயார் செய்து, வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக,

ஓசூர்: சூளகிரி அருகே நரிக்குறவர் குடும்பங்களுக்கு, வையகம் பவுண்டேசன் சார்பில் தலா, 25 கிலோ அரிசியை, புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் வழங்கினார்.


சூளகிரி ஒன்றியம், நெரிகம் பஞ்., உட்பட்ட கரியசந்திரம் கிராமத்தில், 180 நரிக்குறவர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள், ஊசி, பாசி, மாலை உள்ளிட்டவற்றை தயார் செய்து, வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக, வேலையில்லாமல் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், உணவிற்கு வழியின்றி தவித்து வந்தனர். இதையடுத்து, வையகம் பவுண்டேசன் சார்பில், புதுச்சேரி முன்னாள் சபாநாயகரும், கம்பன் கழக தலைவருமான சிவக்கொழுந்து, ஒரு குடும்பத்திற்கு, 25 கிலோ அரிசி வீதம், 180 குடும்பங்களுக்கு, ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசி மூட்டைகளை வழங்கினார். சூளகிரி தாசில்தார் சரவணன், வையகம் பவுண்டேசன் நிறுவனர் ரவிகுணவதி மைந்தன், வி.ஏ.ஓ., ரவி, பஞ்., தலைவர் தங்கராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக, சூளகிரி அரசு மருத்துவர் ஹரிராம் தலைமையில், கரியசந்திரம் கிராமத்தில், நரிக்குறவர் மக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவை வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X