சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., மாவட்ட செயலாளரின் அண்ணன் அடித்துக் கொலை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட, தே.மு.தி.க., மாவட்ட செயலாளரின் அண்ணனை அடித்துக் கொலை செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அருகே எர்ரம்பட்டியை சேர்ந்தவர் ஹரிகிருஹஷ்ணன், 45. இவர் திருப்பத்தூர் மாவட்ட, தே.மு.தி.க., செயலாளராக உள்ளார். இவரது அண்ணன் மாதேஸ்வரன், 48; ஸ்வீட் கடை வைத்திருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த ஞானவேலு, 24. அவர் அங்குள்ள

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட, தே.மு.தி.க., மாவட்ட செயலாளரின் அண்ணனை அடித்துக் கொலை செய்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அருகே எர்ரம்பட்டியை சேர்ந்தவர் ஹரிகிருஹஷ்ணன், 45. இவர் திருப்பத்தூர் மாவட்ட, தே.மு.தி.க., செயலாளராக உள்ளார். இவரது அண்ணன் மாதேஸ்வரன், 48; ஸ்வீட் கடை வைத்திருக்கிறார். அதே பகுதியை சேர்ந்த ஞானவேலு, 24. அவர் அங்குள்ள 14 வயதுள்ள ஒரு பெண்ணை காதலித்தார். இதை ஹரிகிருஷ்ணனும், மதேஸ்வரனும் கண்டித்துள்ளனர். இதனால் இவர்களுக்கு முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு எர்ரம்பட்டி மாரியம்மன் கோவிலுக்கு ஹரிகிருஷ்ணன் வந்த போது, அவரை ஞானவேலு திட்டினார். அதை மாதேஸ்வரன் தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த ஞானவேலுவின் நண்பர்களான சந்தோஷ், துளசி, கதிர்வேல் ஆகியோர் தடியால் தாக்கியதில் மாதேஸ்வரன் படுகாயமடைந்தார். திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். கந்திலி போலீசார் சந்தோஷ், 27, துளசி, 30, கதிர்வேலுவை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X