பொது செய்தி

தமிழ்நாடு

அரசு உத்தரவை மீறினாரா உதயநிதி?

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
திருச்சி: 'தலைமைச் செயலகம் பெயரை யாரும் பயன்படுத்த அனுமதியில்லை' என, அரசின் சார்பில் அறிக்கை வெளியிட்ட நிலையில், தலைமைச் செயலகம் பெயரில் பத்திரிகையாளர் சங்கம் நடத்துபவர்களிடம், எம்.எல்.ஏ., உதயநிதி, நிதி வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தமிழக செய்தி துறை சார்பில் கடந்த, 4ம் தேதி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாடு தலைமைச் செயலக பிரஸ் மீடியா என்ற

திருச்சி: 'தலைமைச் செயலகம் பெயரை யாரும் பயன்படுத்த அனுமதியில்லை' என, அரசின் சார்பில் அறிக்கை வெளியிட்ட நிலையில், தலைமைச் செயலகம் பெயரில் பத்திரிகையாளர் சங்கம் நடத்துபவர்களிடம், எம்.எல்.ஏ., உதயநிதி, நிதி வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக செய்தி துறை சார்பில் கடந்த, 4ம் தேதி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாடு தலைமைச் செயலக பிரஸ் மீடியா என்ற பத்திரிகையாளர் சங்கம், விதிகளை மீறி, தலைமைச் செயலகம் பெயரையும், அரசின் முத்திரையையும் லட்டர் பேடில் பயன்படுத்தி வருவது தவறு என்றும், அதற்கு விளக்கம் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், 'தமிழக அரசின் முத்திரையையோ, தலைமைச் செயலகம் என்ற பெயரையோ, அதன் தோற்றத்தையோ யாரும் பயன்படுத்த கூடாது' என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் உதயநிதி எம்.எல்.ஏ., தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'அனைத்து தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண நிதி, 1 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளனர். சங்க நிர்வாகிகளுக்கு நன்றி' என தெரிவித்துள்ளார். அதை பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் 'ரீடுவிட்' செய்துள்ளார். தலைமைச் செயலகம் என்ற பெயரை பயன்படுத்த கூடாது என அரசு உத்தரவிட்ட சில நாட்களில், தலைமை செயலகம் என்ற பெயருடைய சங்கத்திடம், உதயநிதி கொரோனா நிவாரண நிதி வாங்கியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X