பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன்களை தாக்க மாவோயிஸ்ட்கள் திட்டம்; சத்தி, தாளவாடி, பவானிசாகர், பர்கூரில் பாதுகாப்பு அதிகரிப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்ட எல்லையோரம் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் தாக்கலாம் என கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, 10 போலீஸ் ஸ்டேஷன்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தமிழக எல்லையை ஒட்டிய கர்நாடகா மாநில எல்லையோர வனப்பகுதிகளில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, சில நாட்களுக்கு முன் ரகசிய தகவல்

ஈரோடு: ஈரோடு மாவட்ட எல்லையோரம் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் தாக்கலாம் என கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, 10 போலீஸ் ஸ்டேஷன்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழக எல்லையை ஒட்டிய கர்நாடகா மாநில எல்லையோர வனப்பகுதிகளில், மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக தமிழக நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு, சில நாட்களுக்கு முன் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மேலும், சில முக்கிய தடயங்களை அவர்கள் கைப்பற்றினர். இதை தமிழக உளவு துறை போலீசாரும் உறுதிப்படுத்தினர். மேலும் கர்நாடகா மாநில வனப்பகுதியை ஒட்டிய எல்லையோரம் உள்ள, தமிழக போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, 'அலர்ட்'டாக இருக்கும்படி உளவுத்துறை போலீசார் எச்சரித்தனர். அதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகா எல்லையை ஒட்டி, பர்கூர், வெள்ளி திருப்பூர், பங்களாபுதூர், பவானிசாகர், ஆசனூர், கடம்பூர், சத்தி, தாளவாடி உள்ளிட்ட, 10 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. கர்நாடகா மாநில எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் நடமாட்டம், மாவோயிஸ்ட் நடமாட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலை பயன்படுத்தியும், அதிகாரிகளின் கவனம் நோய் தடுப்பு நடவடிக்கையில் இருக்கும் சூழலை பயன்படுத்தி, தமிழக எல்லையோர மாவட்டமான, ஈரோடு மாவட்ட வன கிராமங்களுக்குள், அவர்கள் நுழைய கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. மேலும் ஈரோடு மாவட்ட எல்லையோர போலீஸ் ஸ்டேஷன்களை தாக்க முயற்சிக்கலாம் என்பதால், கர்நாடக மாநில எல்லையோரம் இருக்கும், 10 போலீஸ் ஸ்டேஷனிலும், 24 மணி நேரமும், தலா, நான்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் கூடுதலாக பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறையினர் தனித்தனியாகவும், கூட்டாகவும் மாவோயிஸ்ட்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாவோயிஸ்ட்கள், சந்தேகப்படும்படியான நபர்கள் கர்நாடகா எல்லையோர பகுதியில் இருந்து, ஈரோடு மாவட்டத்துக்குள் நுழைந்து விட கூடாது என்பதற்காக நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறையினருடன் இணைந்து வன எல்லையோர கிராமங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X