தமிழ்நாடு

அரசு விதிகளை மீறி செயல்படும் ஜவுளி நிறுவனங்கள்; கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் நகரில், அரசின் விதிமுறைகளை மீறி ஏராளமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகளவில் பணியாளர்களுடன் செயல்படுகின்றன. இதனால், வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த வரும், 14 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தொற்று பரவல் அதிகம் உள்ள, கரூர் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில் முழு

கரூர்: கரூர் நகரில், அரசின் விதிமுறைகளை மீறி ஏராளமான ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் அதிகளவில் பணியாளர்களுடன் செயல்படுகின்றன. இதனால், வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த வரும், 14 வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தொற்று பரவல் அதிகம் உள்ள, கரூர் உள்ளிட்ட, 11 மாவட்டங்களில் முழு கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மளிகை, பல சரக்கு, காய்கறி, இறைச்சி கடைகள், நடை பாதை கடைகள், பூக்கடைகள் காலை, 6:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்களில், 30 சதவீத பணியாளர்களும், சார்பதிவாளர் அலுவலகங்களில், 50 சதவீத பத்திரப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கரூரில் ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருந்தால், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்கும், மாதிரி அனுப்ப, 10 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், பல ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், அரசின் உத்தரவை மதிக்காமல் வேன், கார்களில் நூல் பண்டல், ஜவுளி உற்பத்தி பொருட்களை கொண்டு சென்றன. மேலும், அளவுக்கு அதிகமான ஏற்றுமதி நிறுவன ஊழியர்கள் டூவீலர்களில் சென்றனர். கரூர் நகரில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்றுமதி நிறுவனங்கள், 10 சதவீத தொழிலாளர்களுடன் இயங்குகிறதா என, மாவட்ட நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை அலுவலக அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். கரூர் மாவட்டத்தில், இம்மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று, 500 ஐ தாண்டியது. ஊரடங்கு காரணமாக தொற்று படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம், 196ஆக குறைந்தது.

இந்நிலையில், கரூர் நகரில் அரசின் விதிமுறைகளை மீறி ஜவுளி நிறுவனங்கள், அதிக பணியாளர்களுடன் இயங்கி வருவதால் கொரோனா தொற்று, வரும் நாட்களில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அரசின் விதிமுறைகளை மீது செயல்படும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X