சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிருஷ்ணகிரி கருவாட்டு கடையில் சிக்கிய கள்ளநோட்டு ஜோடி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்தவர், முத்தையா; கட்டட மேஸ்திரி. கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜோதி; கணவர் இறந்துவிட்டார். இவர் மாரண்டஹள்ளி பகுதி அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அப்போது,

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்தவர், முத்தையா; கட்டட மேஸ்திரி. கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜோதி; கணவர் இறந்துவிட்டார். இவர் மாரண்டஹள்ளி பகுதி அரசுப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். அப்போது, முத்தையாவுக்கும், ஜோதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த, 8 மாலை முத்தையா, ஜோதியை அழைத்துக் கொண்டு, டி.வி.எஸ்., மொபட்டில் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளார். சப் ஜெயில் ரோட்டில் உள்ள கடையில் கருவாடு வாங்கிவிட்டு, 200 ரூபாய் கள்ள நோட்டை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய கருவாட்டு கடைக்காரர் சந்தேகம் வந்து கேட்கவே, பதில் கூறாமல் அடுத்த கடையில் சென்று முத்தையா பொருட்கள் வாங்கியுள்ளார். இதுகுறித்து கடைக்காரர் அப்பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த முருகன் என்ற போலீசிடம் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்ததில், அவர்களுக்கு பணத்தை கொடுத்தவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த எர்ரக்காடு பகுதியைச் சேர்ந்த, பூசாரி முருகன், 47, என்பது தெரிந்தது. முருகன் வீட்டுக்கு சென்ற போலீசார், அவர் கள்ள நோட்டு தயாரிப்பதற்கு பயன்படுத்திய, 2 பிரிண்டர், டி.வி.எஸ்., மொபட், 48 ஆயிரத்து, 400 ரூபாய் கள்ள நோட்டை பறிமுதல் செய்து, முத்தையா, ஜோதி, முருகன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X