பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து சரிவு; தென்பெண்ணையில் தொடர்ந்து 560 கன அடி நீர் திறப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று, 334 கன அடியாக நீர்வரத்து சரிந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து நான்காவது நாளாக, 560 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், கடந்த, 6 முதல், நேற்று முன்தினம் வரை, 560 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், 560 கன அடி நீரும், தென்பெண்ணை ஆற்றில்

ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று, 334 கன அடியாக நீர்வரத்து சரிந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் தொடர்ந்து நான்காவது நாளாக, 560 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், கடந்த, 6 முதல், நேற்று முன்தினம் வரை, 560 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், 560 கன அடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து சரிந்து, 334 கன அடியாக குறைந்தது. இருந்த போதும், தென்பெண்ணை ஆற்றில் நேற்று நான்காவது நாளாக, 560 கன அடி நீர் திறக்கப்பட்டதால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. நேற்று காலை நிலவரப்படி, அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 39.69 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. அணைக்கு நீர்வரத்து குறைந்ததால், தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்ட நீரில் ரசாயன நுரை தென்படவில்லை. வரும் நாட்களில் அணைக்கு நீர்வரத்தை பொறுத்து, தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு முடிவு செய்யப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X