சேலம்: கொரோனா தொற்றுக்கு பயன்படுத்தும் முக கவசம் உள்ளிட்ட பொருட்கள் விலையை, அரசு குறைத்த நிலையிலும், சேலம் மாவட்டத்தில் பழைய விலையில் தான் விற்கப்பட்டன.
இதுகுறித்து, தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலர் செல்வன் கூறியதாவது:கிருமிநாசினி, முக கவசம், பல்ஸ் ஆக்சிமீட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், பொருட்களுக்கான விலையை அரசு குறைத்துள்ளது. தமிழகம் முழுதும், 30 ஆயிரம் மருந்து சில்லரை வணிக நிறுவனங்கள் உள்ளன. அதில், சேலம் மாவட்டத்தில், 1,500 அடங்கும். கையிருப்பில் உள்ள மருந்து பொருட்கள் விலையை குறைத்து விற்க கூடிய நிலையால், 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். அதில், சேலம் மாவட்டத்தில், 3 கோடி நஷ்டம் அடங்கும். கொரோனா காலத்தில் பணி புரிகிறோம். பொருளாதார நஷ்டம் மருந்து வணிகர்களை சிரமத்துக்கு தள்ளிவிடும். பழைய விலைக்கே விற்க, 10 நாள் அவகாசம் வழங்க வேண்டும். தயாரிப்பாளர்களே, விலையை குறைத்து விற்றால் எங்களுக்கு பிரச்னை இல்லை. பாராசிட்டமால் மருந்து விற்பனை குறித்த தகவல்கள் அரசுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், மளிகை கடைகள், பெட்டி கடைகளில் கூட, பாராசிட்டமால் மருந்துகளை அதிகளவில் விற்று வருகின்றனர். அதை தடுத்து, மக்களை காக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement