பொது செய்தி

தமிழ்நாடு

450 எஸ்.ஐ.,க்கள் காத்திருப்பு: பதவி உயர்வு வழங்க முதல்வருக்கு கோரிக்கை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சேலம்: பதவி உயர்வை எதிர்பார்த்து, 450 எஸ்.ஐ.,க்கள் காத்திருப்பதால், உடனே வழங்க, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக போலீசில், எஸ்.ஐ.,யாக பணியில் சேர்வோருக்கு, சீனியாரிட்டி அடிப்படையில், இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதிகபட்சம், 10 ஆண்டுகளில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைக்கும். ஆனால், 2008 தி.மு.க., ஆட்சியில், 745 பேர் எஸ்.ஐ., பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

சேலம்: பதவி உயர்வை எதிர்பார்த்து, 450 எஸ்.ஐ.,க்கள் காத்திருப்பதால், உடனே வழங்க, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக போலீசில், எஸ்.ஐ.,யாக பணியில் சேர்வோருக்கு, சீனியாரிட்டி அடிப்படையில், இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அதிகபட்சம், 10 ஆண்டுகளில் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு கிடைக்கும். ஆனால், 2008 தி.மு.க., ஆட்சியில், 745 பேர் எஸ்.ஐ., பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, எழுத்து, உடற்தகுதி தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், சீனியாரிட்டி ஏற்படுத்தப்பட்டு, 295 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. 450 பேருக்கு வழங்கவில்லை. அதேநேரம், 2011 ஆயுதப்படையில் எஸ்.ஐ., பணியில் சேர்ந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர்கள், தற்போது டி.எஸ்.பி., பதவி உயர்வுக்கு காத்திருக்கின்றனர். இதனால், 2008ல், எஸ்.ஐ., பணியில் இணைந்தவர்கள், தங்களுக்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்கள், டி.எஸ்.பி., பதவி உயர்வை எட்டிய நிலையில், 13 ஆண்டாக எஸ்.ஐ., பணியில் தொடர்வதாக புலம்புகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தி.மு.க., ஆட்சியில் தேர்வானவர்கள் என்பதால், 10 ஆண்டாக எங்கள் பதவி உயர்வை, அதிகாரிகள் தள்ளிவைத்து விட்டனர். தேர்தல் பிரசாரத்தின்போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், போலீசின் நலன் காக்க பதவி உயர்வு உடனுக்குடன் வழங்கப்படும் என அறிவித்தார். அதனால், 13 ஆண்டாக காத்திருக்கும் எங்களுக்கு, உடனே இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X