தமிழ்நாடு

ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி கிடைக்குமா? 16.43 லட்சம் விவசாயிகள் தவிப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சேலம்: முந்தைய, அ.தி.மு.க., அரசு அறிவித்த, 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், 16.43 லட்சம் விவசாயிகள் தவிக்கின்றனர்.முந்தைய அ.தி.மு.க., அரசு, தேர்தலுக்கு முன், விவசாயிகளின் கடன் நிலுவை தொகை, 12 ஆயிரத்து, 110 கோடியே, 74 லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்து, கடந்த ஜன., 31ல் உத்தரவிட்டது. அதன்மூலம், விவசாய பயனாளிகள், 16.43 லட்சம் பேர் பயன்பெறுவர். தொடக்க வேளாண்

சேலம்: முந்தைய, அ.தி.மு.க., அரசு அறிவித்த, 12 ஆயிரத்து, 110 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில், 16.43 லட்சம் விவசாயிகள் தவிக்கின்றனர்.
முந்தைய அ.தி.மு.க., அரசு, தேர்தலுக்கு முன், விவசாயிகளின் கடன் நிலுவை தொகை, 12 ஆயிரத்து, 110 கோடியே, 74 லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்து, கடந்த ஜன., 31ல் உத்தரவிட்டது. அதன்மூலம், விவசாய பயனாளிகள், 16.43 லட்சம் பேர் பயன்பெறுவர். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், லேம்ப் சங்கங்கள், பயிரிடுவோர் கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கமாக இருந்து, தகுதி உயர்வு பெற்ற, நகர கூட்டுறவு கடன் சங்கங்களில், பெறப்பட்ட விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. அதில், அதிகபட்சமாக, சேலம் மத்திய கூட்டுறவு வங்கி கட்டுப்பாடில், 1,356.03 கோடி ரூபாய் தள்ளுபடியானது. இதுவே, தமிழகத்தில், அதிகபட்ச கடன் தள்ளுபடி தொகை. குறைந்தபட்ச தள்ளுபடி தொகை, ராமநாதபுரத்தில், 101.54 கோடி ரூபாய். தற்போது, ஆட்சிக்கு வந்த தி.மு.க., கடன் தள்ளுபடிக்கு, 'கடன் நிலுவை இல்லை' என்ற சான்று, இதுவரை வழங்கப்படவில்லை என, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஜாமின் இன்றி வழங்கிய, பயிர் கடனுக்கு அடகு வைத்த நகைகளையும் திருப்பி தராமல், கூட்டுறவு சங்கங்கள் போக்குகாட்டுவதாக குற்றம்சாட்டுகின்றனர். அதேநேரம், புதிதாக பயிர் கடன் வழங்க, தி.மு.க., அரசு முனைப்பு காட்டி உள்ளது. மேலும், தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, 5 சவரன் வரை, நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதால், முந்தைய அரசு தள்ளுபடி செய்த பயிர் கடன் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறுகின்றனர். பலமுறை கேட்டும், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கடன் நிலுவை இல்லை சான்று தர மறுப்பது சந்தேகத்தை உறுதிப்படுத்துவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆட்சி மாற்றத்துக்கு பிறகும், சங்க தலைவர்கள் பலர், தங்கள் நிலைப்பாட்டை மாற்றி கொள்ளவில்லை. வழக்கம்போல், தங்கள் ஆதரவாளர்களுக்கே கடன் வழங்க பரிந்துரைத்துள்ளது வேதனையை மேலும் அதிகப்படுத்தி உள்ளதாக, தங்கள் மனக்குமுறலை விவசாயிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X