பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் 'இன்சுலின்' இல்லை: சேலம் மாவட்ட நீரிழிவு நோயாளிகள் தவிப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 'இன்சுலின்' மருந்து இல்லாததால், நீரிழிவு நோயாளிகள் தவித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில், நீரிழிவு நோயாளிகள் அதிகளவில் வந்து சிகிச்சை பெறுவதோடு, மருந்துகள் பெற்றுச்செல்கின்றனர். இங்குள்ள தனி கட்டடத்தில், நீரிழிவு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இங்கு, சாப்பிடுவதற்கு முன்,

சேலம்: சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், 'இன்சுலின்' மருந்து இல்லாததால், நீரிழிவு நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அரசு மருத்துவமனையில், நீரிழிவு நோயாளிகள் அதிகளவில் வந்து சிகிச்சை பெறுவதோடு, மருந்துகள் பெற்றுச்செல்கின்றனர். இங்குள்ள தனி கட்டடத்தில், நீரிழிவு மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இங்கு, சாப்பிடுவதற்கு முன், பின், ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கண்டறியும் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தான இன்சுலின், இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், மூன்று வாரமாக அந்த மருந்து இருப்பு இல்லாமல், நோயாளிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். தனியார் மருந்தகங்களில், ஒரு பாட்டில் இன்சுலின், குறைந்தபட்சம், 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதேநிலை, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது. கொரோனா காலத்தில், ஏழை நோயாளிகள், தனியார் மருந்தகங்களில் இன்சுலின் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனை மருந்தாளுனர்கள் கூறுகையில், 'இன்சுலின் மருந்து தேவை அதிகமாக இருப்பதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது' என்றனர். நீரிழிவு நோயாளிகள் கூறுகையில், 'தினமும் காலை, இரவில், இன்சூலின் மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனையில், வாரம் ஒருமுறை, இரு மருந்து வழங்கப்படும். மூன்று வாரமாக, அதுவும் வழங்காததால் சிரமத்துக்கு ஆளாகிறோம். தமிழக அரசு இன்சுலின் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X