சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது கடத்திய 4 பேர் கைது: 2,133 பாட்டில் பறிமுதல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
சேலம்: பெங்களூருவில் இருந்து, மதுபானம் கடத்தி வந்த நான்கு பேரை கைது செய்த போலீசார், 2,133 பாட்டில்கள், கார், லாரியை பறிமுதல் செய்தனர். சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கருப்பூர் சுங்கச்சாவடியில், எஸ்.ஐ., சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார், நேற்று, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டொயோட்டா காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 20 பெட்டிகளில், 1,399 மதுபாட்டில்கள் இருப்பது

சேலம்: பெங்களூருவில் இருந்து, மதுபானம் கடத்தி வந்த நான்கு பேரை கைது செய்த போலீசார், 2,133 பாட்டில்கள், கார், லாரியை பறிமுதல் செய்தனர். சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கருப்பூர் சுங்கச்சாவடியில், எஸ்.ஐ., சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார், நேற்று, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த டொயோட்டா காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 20 பெட்டிகளில், 1,399 மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. கடத்தலில் ஈடுபட்ட, ராமநாதபுரம், உச்சிப்புளியை சேர்ந்த மணீஷ்வரன், 26, சுப்ர தீபன், 23, ஆகியோரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் தகவல்படி, மற்றொரு மினி லாரியில் கடத்தி வரப்படுவது தெரிந்தது. அந்த லாரியையும், காலை, 4:00 மணிக்கு மடக்கி போலீசார் சோதனை செய்தபோது, 10 பெட்டிகளில், 734 மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. இந்த கடத்தலில் ஈடுபட்ட, கன்னியாகுமரி, நாகர்கோவில், வடசேரியை சேர்ந்த ரமேஷ், 46, முத்துவேல் பிள்ளை, 35, ஆகியோரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அத்துடன், கார், லாரியையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X