சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் சுவற்றில் துளையிட்டு 567 மதுபாட்டில் திருட்டு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஆற்காடு: ஆற்காடு அருகே, டாஸ்மாக் கடை பின்பக்க சுவற்றில் துளையிட்டு, மதுபாட்டில்களை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே நந்தியாலத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கால் கடை திறக்கப்படவில்லை. நேற்று காலை, 9:00 மணிக்கு அந்த வழியாக சென்றவர்கள் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டுள்ளது குறித்து போலீசாருக்கு தகவல்

ஆற்காடு: ஆற்காடு அருகே, டாஸ்மாக் கடை பின்பக்க சுவற்றில் துளையிட்டு, மதுபாட்டில்களை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே நந்தியாலத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. ஊரடங்கால் கடை திறக்கப்படவில்லை. நேற்று காலை, 9:00 மணிக்கு அந்த வழியாக சென்றவர்கள் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டுள்ளது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ரத்தினகிரி போலீசார் விசாரணை செய்தனர். அதில், மர்ம நபர்கள் சுவற்றில் துளையிட்டு, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 567 மதுபாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது. போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X