பொது செய்தி

தமிழ்நாடு

முல்லை பூ விலை கடும் வீழ்ச்சி: சாலையில் கொட்டும் அவலம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
செங்கம்: செங்கம் பகுதியில், முல்லை பூ வாங்க ஆட்கள் இல்லாததால், விவசாயிகள் சாலையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு, மண்மலை, முறையாறு, உள்ளிட்ட அதை சுற்றியுள்ள, 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் முல்லை, மல்லி, சாமந்தி, கோழி கொண்டை பூ என, பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால், திருமணம்,

செங்கம்: செங்கம் பகுதியில், முல்லை பூ வாங்க ஆட்கள் இல்லாததால், விவசாயிகள் சாலையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு, மண்மலை, முறையாறு, உள்ளிட்ட அதை சுற்றியுள்ள, 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் முல்லை, மல்லி, சாமந்தி, கோழி கொண்டை பூ என, பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால், திருமணம், கோவில் திருவிழாக்கள், போன்றவை விமரிசையாக நடத்தப்படாததால், விவசாயிகள் விளைவிக்கப்படும் பூக்களை வாங்க ஆட்கள் யாரும் முன்வரவில்லை, மேலும், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதி களுக்கும் பூக்களை அனுப்பி வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் நேற்று விற்பனையாகாத முல்லை பூக்களை, செங்கம் - போளூர் சாலையில்கொட்டினர். இது குறித்து விவசாயிகள் கூறும்போது, 'முல்லை, மல்லி போன்ற பூக்கள் பறிப்பதற்கு ஒரு கிலோவிற்கு கூலியாக, 10 ரூபாய் வழங்குகிறோம். கடந்த சில நாட்களாக முல்லை பூ ஒரு கிலோ, 20 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை விற்பனையான நிலையில், தற்போது, 10 ரூபாய்க்கும் குறைவாகவே விற்பனையாகிறது. அதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள் கொண்டு செல்லும் பூக்கள் முழுவதையும் வியாபாரிகள் வாங்குவதில்லை. வேறு வழியின்றி பூக்களை சாலையில் கொட்டி அழிக்கிறோம். இதனால், விவசாயிகள், கடும் பாதிப்புக்களாகி உள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X