சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடனை திரும்ப பெற குழந்தை கடத்தல்: கோவையில் வாலிபர் கைது

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வடவள்ளி: கோவையில், கடனை திரும்ப பெற குழந்தையை கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டனர்.கோவை, வடவள்ளி, வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் சரவணக்குமார், 23. இவருக்கும், தர்மபுரி சேர்ந்த பெண்ணிற்கும், சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தையொட்டி, அந்த பெண், சரவணகுமாரிடம், 1.50 லட்சம் ரூபாய் பெற்று, தனது கணவனுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.
கடனை திரும்ப பெற குழந்தை கடத்தல்: கோவையில் வாலிபர் கைது

வடவள்ளி: கோவையில், கடனை திரும்ப பெற குழந்தையை கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார், குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

கோவை, வடவள்ளி, வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் சரவணக்குமார், 23. இவருக்கும், தர்மபுரி சேர்ந்த பெண்ணிற்கும், சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தையொட்டி, அந்த பெண், சரவணகுமாரிடம், 1.50 லட்சம் ரூபாய் பெற்று, தனது கணவனுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில், சரவணகுமார், தர்மபுரியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்று, கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அப்பெண், பணத்தைக் கொடுக்க கால அவகாசம் கேட்டுள்ளார். இருவரும் பேசி கொண்டிருக்கையில், அப்பெண் அறைக்குள் சென்ற நேரத்தில், அருகில் இருந்த பெண்ணின் மகனான ஏழு வயது சிறுவனை, தூக்கிக்கொண்டு சரவணக்குமார் வெளியேறினார்.

இந்நிலையில், தனது மகனை, கடத்தி சென்றுவிட்டதாக, தாய், தர்மபுரி போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த தர்மபுரி போலீசார், சிறுவனையும், சரவணக்குமாரையும் தீவிரமாக தேடி வந்தனர். விசாரணையில், சரவணகுமார் கோவை, வடவள்ளியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கோவை வந்த தனிப்படையினர், வடவள்ளி இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ., சேகர் உதவியுடன் சரவண குமார் கைது செய்த போலீசார், சிறுவனை பத்திரமாக மீட்டனர். விசாரணைக்காக, குழந்தையும், சரவணகுமாரையும் தனிப்படை போலீசார், தர்மபுரிக்கு அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-ஜூன்-202105:10:10 IST Report Abuse
Mani . V இந்த நாயை சுட்டுத் தள்ள முடியாதா? எது அவன் மாமூல் தள்ளுகிறானா?
Rate this:
Cancel
வாரிசு குலத்தொழில் நிராகரிப்போம் கடன் வாங்கி கார் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X