பொது செய்தி

இந்தியா

கோவிட் சூழலால் விதிகளை ஏற்பதில் தாமதமாகிவிட்டது: காரணம் சொல்லும் டுவிட்டர்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக டுவிட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சில அதிகாரிகளை அதற்காக நியமித்திருப்பதாக கூறியுள்ளது.பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை வரைமுறைப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த மாதம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது.
Twitter, Government, New Digital Rules, கோவிட், சமூக ஊடகங்கள், டிஜிட்டல் விதிமுறை, டுவிட்டர், மத்திய அரசு

புதுடில்லி: சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளுக்கு இணங்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக டுவிட்டர் நிறுவனம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சில அதிகாரிகளை அதற்காக நியமித்திருப்பதாக கூறியுள்ளது.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை வரைமுறைப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த மாதம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதன்படி அவை இந்தியாவைச் சேர்ந்த ஒரு குறைதீர்வு அதிகாரி, ஒரு நோடல் அதிகாரி மற்றும் முதன்மை இணக்க அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும். மனதை புண்படுத்தும் விதமான பதிவுகளை குறிப்பிட்ட உடன் 36 மணி நேரத்தில் நீக்க வேண்டும். மேலும் இந்திய இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு, பொது ஒழுங்கு போன்றவற்றை குலைக்கும் தகவல்களை முதலில் யார் வெளியிடுகிறார் என கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு இணங்கவில்லை என்றால் அந்தக் கருத்துகளுக்காக கிரிமினல் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறது.


latest tamil news


இதற்கு பேஸ்புக் ஓகே தெரிவித்துவிட்டது. ஆனால் டுவிட்டர் நிறுவனம் முதலில் இணங்க மறுத்து முரண்டு பிடித்தது. அரசு டுவிட்டருக்கு இறுதி வாய்ப்பு வழங்கி, ஏற்கவில்லை என்றால் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறியிருந்தது. அடுத்த சில நாட்களில் அவகாசம் கோரியது டுவிட்டர். தற்போது மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவைச் சேர்ந்த குறைதீர்வு அதிகாரி மற்றும் நோடல் அதிகாரியை நியமித்திருப்பதாகவும், முதன்மை இணக்க அதிகாரியை இறுதி செய்யும் நிலையில் உள்ளோம் என கூறியுள்ளது.


latest tamil news


மேலும் அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்த விதிமுறைகளின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்திய பணியாளர்களை பணியமர்த்துவது உள்ளிட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க நல்லெண்ணத்துடன் முயற்சித்துள்ளோம். வழிகாட்டுதல்களை ஏற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் செய்வதை, உலகளாவிய பெருந்தொற்று பாதிப்பு மிகவும் சிக்கலாக்கிவிட்டது. இந்தியாவில் பொது உரையாடலுக்கான ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் இந்திய மக்களுக்கு சேவை செய்வதில் உறுதியுடன் இருக்கிறோம். குறிப்பாக முக்கியமான தருணங்களில், தற்போது காணும் நெருக்கடியான சூழலில் மக்களுடன் இருப்போம். இவ்வாறு அந்த கடித்ததில் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
10-ஜூன்-202123:44:35 IST Report Abuse
GANESUN லேட் ஃபீஸ் போடுங்கையா அப்பத்தான் வழிக்கு வருவாங்க.
Rate this:
Cancel
10-ஜூன்-202121:56:23 IST Report Abuse
அசோகா கொண்டையை மறைங்க (twitter)
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
10-ஜூன்-202118:47:50 IST Report Abuse
Raj ஏதாச்சும் காரணம் சொல்லி விரட்டி விடுங்க. அப்போ தான் நம்மு ஒரு ஆப் களுக்கு சந்தை கிடைக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X