அரசியல் செய்தி

தமிழ்நாடு

தொற்று இல்லாத தமிழகம்: ஸ்டாலின்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: நோய் தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு, உங்களை சந்திக்க வருவேன் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: நானும், அமைச்சர்களும் 24 மணி நேரமும், பணியாற்றியதால், நோய்தொற்று சங்கிலி உடைக்கும் முயற்சிக்கு ஓரளவு நல்ல பலன் கிடைத்து உள்ளது. நாளை திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காவிரி
DMK, MKStalin, Stalin, TN, Tamilnadu, தமிழகம், தமிழ்நாடு, திமுக, ஸ்டாலின்

சென்னை: நோய் தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு, உங்களை சந்திக்க வருவேன் என தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளதாவது: நானும், அமைச்சர்களும் 24 மணி நேரமும், பணியாற்றியதால், நோய்தொற்று சங்கிலி உடைக்கும் முயற்சிக்கு ஓரளவு நல்ல பலன் கிடைத்து உள்ளது. நாளை திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் காவிரி பாசன பகுதிகளில் நடக்கும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட பின்னர், ஜூன் 12ல் சேலம் மாவட்டத்தில் நடக்கும் ஆய்வு பணிகள், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று அதன் பின்னர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட இருக்கிறேன்.


latest tamil news


மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நான் மேற்கொள்ள இருப்பவை அரசு பணிகள் சார்ந்தவை என்பதால், அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் என்னை சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம். வரவேற்பு அலங்காரங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம் என மீண்டும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.

சேலமும், தஞ்சாவூரும், நோய் தொற்று எண்ணிக்கை சற்று கூடுதலாக உள்ள மாவட்டங்கள். எனவே, அங்கு ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். நோய் தொற்று இல்லாத தமிழகத்தை உருவாக்கிவிட்டு, உங்கள் அன்பு முகம் காண நேரில் வருவேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஜூன்-202123:05:17 IST Report Abuse
Pugazh V ஹ ஹ ஹ ஹ..பீஜேபீ சங்கிகளின் கதறல்களும் புலம்பல்களும் எத்தனை ஆனந்தம் இனிமை. மேலும் மேலும் கதறவும். இன்னும் பத்து பதினைந்து ஆண்டு களுக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் முதல்வர். புடிக்காதவர்கள் குடும்பத்தோடு உ.பி. குஜராத் ராஜஸ்தான் என்று எங்கேயாவது ஓடிப் போயிடுங்கோ. இங்கே கிடந்து புலம்பி காமெடி பீஸ் ஆயிண்டிருக்காதீங்கோ.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
10-ஜூன்-202123:01:47 IST Report Abuse
bal இன்னொரு ஐந்து வருடத்துக்கு தமிழகத்துக்கு வியாதி உள்ளது...
Rate this:
Cancel
முட்டாள் முல்லா - Macca,ஐக்கிய அரபு நாடுகள்
10-ஜூன்-202122:47:17 IST Report Abuse
முட்டாள் முல்லா நம்பில். மாவட்ட ஒன்றிய முதல் வர்ரு.. வாய்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X