பொது செய்தி

இந்தியா

தடுப்பூசியை வீணடித்ததில் ஜார்க்கண்ட் முதலிடம்: பாராட்டை பெறும் கேரளா, மே.வங்கம்

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே ஒரு தீர்வு. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால், தடுப்பூசி திட்டம் தொய்வடைந்து உள்ளது.இந்த நிலையில், மாநில அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது மற்றும் வீணடிக்கப்பட்ட அளவு குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் படி, கடந்த மே மாதத்தில் கேரளாவும், மேற்கு வங்கமும்

புதுடில்லி: நாட்டில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே ஒரு தீர்வு. ஆனால் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால், தடுப்பூசி திட்டம் தொய்வடைந்து உள்ளது.



latest tamil news



இந்த நிலையில், மாநில அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டது மற்றும் வீணடிக்கப்பட்ட அளவு குறித்த புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன் படி, கடந்த மே மாதத்தில் கேரளாவும், மேற்கு வங்கமும் தடுப்பூசி மருந்துகளை வீணடிக்காமல், முழுவதுமாக பயன்படுத்தி உள்ளன. கேரளாவும், மேற்கு வங்கமும் முறையே 1.10 லட்சம் மற்றும் 1.61 லட்சம் தடுப்பூசிகளை முழுவதும் பயன்படுத்தி, சுகாதாரத் துறையின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.


latest tamil news



ஆனால், நாட்டிலேயே ஜார்க்கண்ட் மாநிலம் 33.95 சதவீதம் அளவுக்கு தடுப்பூசிகளை வீணடித்து, தடுப்பூசி மருந்து வீணடிப்பதில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கடுத்து, சத்தீஸ்கர் 15.79 சதவீதமும், மத்தியப் பிரதேசம் 7.35 சதவீத மருந்தையும் வீணடித்திருப்பது தெரியவந்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
11-ஜூன்-202110:08:12 IST Report Abuse
Sampath Kumar அந்த மாநிலத்தை ஆள்பவர் யாரு ? அவர்களின் தவறு தான் இடது சாரிகள் ஆளும் மாநிலம் முதலில் உள்ளது பாரதிக்கு உரியது மத்தியில் ஆளும் பிஜேபி ஆளும் மாநிலம் ஒன்றும் ஒரு இடத்திலும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X