பொது செய்தி

தமிழ்நாடு

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவு

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (48)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக தொடக்கக் கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவு: தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், மழலையர் மற்றும்
TN, Schools, Unaccredited, Closed, தமிழகம், பள்ளிகள், அங்கீகாரம், மூட உத்தரவு, தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தொடக்கக் கல்வி இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவு: தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், சுயநிதியில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் மற்றும் இளம் மழலையர் பள்ளிகள் ஆகியவை சார்பாக தொடக்க அனுமதி, அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் சார்பாக விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


latest tamil news


அங்கீகாரம் பெறுவதற்குரிய முழுமையான வடிவில் கருத்துரு அளிக்க இயலாத பள்ளிகளை உடனடியாக இக்கல்வி ஆண்டுடன் மூடுதல் சார்ந்து உரிய விதிமுறைகளின்படி அப்பள்ளியில் பயலும் மாணவ, மாணவிகளை வேறு பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். துவக்க அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் அனைத்து இளம் மழலையர் பள்ளிகள், நர்சரி மற்றும் பள்ளிகள், சுயநிதி தொடக்க, நடுநிலை பள்ளிகள், உதவிபெறும் தொடக்கநிலை பள்ளிகளை மூடுதல் சார்ந்து விதிமுறைகளின்படி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

துவக்க அங்கீகாரம், தொடர் அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்படுமானால் , வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரே பொறுப்பேற்க நேரிடும். எனவே, அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது பள்ளி வாரியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை விவரத்தினை ஜூன் 20க்குள் இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
11-ஜூன்-202108:05:17 IST Report Abuse
Indhuindian வூர்ல ஆடிச்ச திருப்பி அடகிக்காதவன் மூணு பேர்தான் ஒன்னு பிள்ளயார் கோயில் பூஜாரி ரெண்டு பிளாஸ்டிக் பக்கெட் விக்கறவன் மூணாவது ஏமாந்த வாத்யார் அதே மாதிரி கரகாரதுண்ணு சில துறை இருக்கு சத்தமே போடமாட்டங்க சைலெண்டா கல்லா கட்டலாம் ஒன்னு தனியார் பள்ளிக்கூடம், ரெண்டாவது சினிமாத்துறை மூணாவது சாராய வ்யாபாரிங்க. அதனாலே அவங்களுக்கு ஒன்னும் நஷ்டமே இல்லை பசங்க தலையிலே, இல்லேன்னா ரசிகர்கள் தலையிலே இல்லேன்னா டாஸ்மாக் சப்போர்ட்டர்க தலையிலே கட்டிடடலம். கலைக்கு கம்பு வெட்டின மாதிரியும் ஆச்சு தம்பிக்கு பொண்ணு பாத்த மாதிரியும் ஆச்சு
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
11-ஜூன்-202107:49:57 IST Report Abuse
ravi அப்படியே தரமற்ற ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
11-ஜூன்-202107:33:52 IST Report Abuse
jagan வசூல் ராஜா PTR ராஜனின் ஐடியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X