இனவெறி தாக்குதல், மனித உரிமை மீறல் அதிகரிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் கவலை

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
லண்டன்: கோவிட் பெருந்தொற்று சூழலில் இனவெறித் தாக்குதல், குழந்தைகள் மீதான வன்முறை, மனித உரிமை மீறல்கள் அதிகரித்து உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்து உள்ளது.ஐரோப்பிய யூனியன் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:கோவிட் பெருந் தொற்று காலம் சமநிலையற்ற போக்கை அனைத்துத் துறைகளிலும் உருவாக்கி உள்ளது. சமூகத்தில் பலவீனமானவர்கள் மேலும்

லண்டன்: கோவிட் பெருந்தொற்று சூழலில் இனவெறித் தாக்குதல், குழந்தைகள் மீதான வன்முறை, மனித உரிமை மீறல்கள் அதிகரித்து உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்து உள்ளது.



latest tamil news



ஐரோப்பிய யூனியன் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:கோவிட் பெருந் தொற்று காலம் சமநிலையற்ற போக்கை அனைத்துத் துறைகளிலும் உருவாக்கி உள்ளது. சமூகத்தில் பலவீனமானவர்கள் மேலும் பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றனர். ஊரடங்கால் ஏராளமானோர் வேலைவாய்ப்பை இழந்து உள்ளனர்.

மனித உரிமை மீறல், இனவெறித் தாக்குதல், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் போன்றவை பல மடங்கு அதிகரித்து உள்ளன. இதற்கு எதிராக அரசுகளும் தன்னார்வ அமைப்புகளும் கவனம் செலுத்த வேண்டிய அவசர நிலை உருவாகி உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கோவிட் பெருந்தொற்றால் பல நாடுகளில் வறுமையும், வன்முறையும் அதிகரித்துள்ளன. குறிப்பாக, உள்நாட்டில் போர் நிலவும் ஏமன், ஆப்கானிஸ்தான், காங்கோ போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகளும் அதிகரித்து வருவதை சில மாதங்களுக்கு ஐ.நா., குறிப்பிட்டுக் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
10-ஜூன்-202121:42:03 IST Report Abuse
A.George Alphonse இவர்கள் கவலை மட்டும் படுவார்கள்.இன வெறி தாக்குதல் உலகம் தோன்றிய காலத்தில் இருந்தேதொடரும் ஒரு நிகழ்வு.இதை யாருமே மாற்ற முடியாது.அந்த கடவுளே வந்தாலும் மாற்றமுடியாது.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
10-ஜூன்-202120:06:37 IST Report Abuse
blocked user திமுக போல ஆரியன் திராவிடன் என்று சொல்லித்திரிந்தால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா?
Rate this:
Cancel
Ram - ottawa,கனடா
10-ஜூன்-202118:40:56 IST Report Abuse
Ram நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் சமம் என்று சொல்லிவிட்டு , ஒரு சாராருக்கும் மற்றும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கல்வியில் முன்னுரிமை என்று கொடுத்தால் , சமநிலை விழும் இந்தமாதிரியான செயல்கள் நடக்கத்தான் செய்யும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X