டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள்; ஜே.பி.நட்டா எதிர்பார்ப்பு

Updated : ஜூன் 10, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் 13 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது இந்தாண்டு டிசம்பருக்குள் 19 நிறுவனங்களாக அதிகரிக்கும் எனவும், அதன்மூலம் டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ., அலுவலகத்தை காணொலி மூலம் திறந்து வைத்த பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: கடந்த
Nadda, CovidVaccine, December, India

புதுடில்லி: இந்தியாவில் 13 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாகவும், இது இந்தாண்டு டிசம்பருக்குள் 19 நிறுவனங்களாக அதிகரிக்கும் எனவும், அதன்மூலம் டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜ., அலுவலகத்தை காணொலி மூலம் திறந்து வைத்த பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: கடந்த ஆண்டு கோவிட் பரவல் முதல் அலையின் போது நம்மிடம் கோவிட் பரிசோதனைக்கு ஒரேயொரு சோதனைக் கூடம் தான் இருந்தது. அதில், ஒருநாளைக்கு 1,500 மாதிரிகள் மட்டுமே சோதனை செய்யும் அளவில் இருந்தது. ஆனால், இப்போது, நாடு முழுவதும் 2,500 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. தினசரி சராசரியாக 25 லட்சம் மாதிரிகளை பரிசோதிக்கிறோம். கோவிட்டை எதிர்கொள்ள தேசம் தன்னைத் தானே தகவமைத்துக்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.


latest tamil news


பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி 900 மெட்ரிக் டன்னில் இருந்து 9,446 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களில், இந்தியா இரண்டு தடுப்பூசிகளை உற்பத்தி செய்திருக்கிறது. இது மிகப்பெரிய சாதனை. இன்று இந்தியாவில் 13 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் 19 நிறுவனங்களாக இது அதிகரிக்கும். இதன்மூலம் இந்தாண்டு டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Elango - Kovai,இந்தியா
11-ஜூன்-202107:36:08 IST Report Abuse
Elango அப்புறம் எதுக்கு சாமி தடுப்பூசிகள் கையிருப்பு பற்றி சொல்லக்கூடாது என்று சட்டம் போட்டீர் ?? பொய்கள் வெளிப்ட்டு விடும் என்றா ???
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஜூன்-202107:14:30 IST Report Abuse
தல புராணம் ஒண்ணரை வருடம் குறட்டை.. நடுவுலே ஆக்சிஜன் இல்லாம ஒரு அலை.. இப்போ டிசம்பருக்குள்.. தடுப்பூசி இல்லாம இன்னொரு அலை..
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
11-ஜூன்-202110:02:15 IST Report Abuse
RaajaRaja Cholanஇவனுக்கு மோடியை பத்தி பேசலைன்னா மொத்தமா போயிடுவான் , மூர்க்கன்...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஜூன்-202107:12:54 IST Report Abuse
தல புராணம் டிசம்பருக்குள் 200 கோடி தடுப்பூசிகள் எதிர்பார்ப்பு .. அம்புட்டு தான்.. வாயிலே வடை... ஸ்விஸ் வங்கியில் கறுப்புப்பணம் இருக்கும்ன்னு எதிர்பார்ப்பு.. அதை எடுத்து ஆளுக்கு பைனஞ்சி லட்சம் தருவோம்ன்னு ..வாயிலே வடை.. வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு இதைத்தான் சொல்லியிருக்காங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X