பொது செய்தி

தமிழ்நாடு

30 வருவாய் கிராமங்களில் மண் மாதிரி சேகரிப்பு தொடக்கம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மோகனூர்: மோகனூர் வட்டாரத்தில் உள்ள, 30 வருவாய் கிராமப்பகுதிகளில், மண் மாதிரி சேகரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அதன் தொடக்க நிகழ்ச்சி, பேட்டப்பாளையத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் ஜெயமாலா தலைமை வகித்து, பணியை துவக்கி வைத்து பேசியதாவது: விவசாயிகள், மண்ணிற்கு தேவையான தரமான உரத்தை பயிரிடப்படும் பயிருக்கு ஏற்ப அறிந்துக்கொள்ள, மண் பரிசோதனை செய்வது அவசியம். மண்

மோகனூர்: மோகனூர் வட்டாரத்தில் உள்ள, 30 வருவாய் கிராமப்பகுதிகளில், மண் மாதிரி சேகரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடக்க நிகழ்ச்சி, பேட்டப்பாளையத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் ஜெயமாலா தலைமை வகித்து, பணியை துவக்கி வைத்து பேசியதாவது: விவசாயிகள், மண்ணிற்கு தேவையான தரமான உரத்தை பயிரிடப்படும் பயிருக்கு ஏற்ப அறிந்துக்கொள்ள, மண் பரிசோதனை செய்வது அவசியம். மண் பரிசோதனை செய்வதன் மூலம், மண்ணின் தன்மையை அறியவும், களர், உவர் மற்றும் அமில நிலங்களை அறிந்து, அவற்றை சீர்திருத்தம் செய்யவும், பயிர்களின் வளர்ச்சிக்கும், பேரூட்டம், நுண்ணூட்ட சத்துக்களின் அளவை அறிந்து, அதற்கேற்ப உரமிடவும் உதவுகிறது. சமச்சீர் உரம் இடுவதன் மூலம், பயிர்களின் எதிர்ப்பு திறனை மேம்படுத்துவதுடன், சாகுபடி செலவையும் குறைக்க முடியும். மண்வள அட்டையின் பரிந்துரையின்படி, உர தேவையை பூர்த்தி செய்து, நிறைவான மகசூலை பெற முடியும். ஒரு மண் மாதிரிக்கு, 20 ரூபாய் ஆய்வு கட்டணம் செலுத்தி, விவசாயிகள், மண் பரிசோதனை செய்து கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார். மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் தனலட்சுமி, மண்மாதிரி சேகரிக்கும் முறை, மண் பரிசோதனை முக்கியத்துவம் குறித்து விளக்கினார். வேளாண் அலுவலர் சுரேஷ், உதவி வேளாண் அலுவலர் கேசவன், முன்னோடி விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X