பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாட்டு மண்டலத்தில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்: கலெக்டர்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
நாமக்கல்: ''கட்டுப்பாடு மண்டலங்களில், வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்,'' என, கலெக்டர் மெகராஜ் பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து, மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல்: ''கட்டுப்பாடு மண்டலங்களில், வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்,'' என, கலெக்டர் மெகராஜ் பேசினார்.


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் குறித்து, மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.


கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், கெரோனா நோயாளிகளுக்காக, கூடுதல் படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், சித்த மருத்துவ கொரோனா சிறப்பு சிகிச்சை மையம், கூடுதல் படுக்கைகளுக்காக, தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு, சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று, கொரோனா தொற்று அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி உள்ள நபர்கள் குறித்து கேட்டும், பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலம், ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்கள் கண்டறியப்பட்டும் வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்றாளர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு, களப்பணியில் ஏற்படும் இடையூறுகளை களைந்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளை, மண்டல அலுவலர்கள் செய்ய வேண்டும். கட்டுப்பாட்டு மண்டலங்களில், வீடுகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பல்ஸ் ஆக்சி மீட்டர் கொண்டு, ஆக்சிஜன் அளவு, 94க்கு குறைவாக உள்ள நபர்கள் பட்டியலை, சுகாதாரத் துறைக்கு அனுப்பி பரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் (பொ) கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X