பொது செய்தி

தமிழ்நாடு

திருநங்கைகள் சார்பில் உணவு வழங்கல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல்லில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளியவர்களுக்கு திருநங்கைகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது. நாமக்கல் நகரில் செயல்படும், 'இதயம் திருநங்கைகள் முன்னேற்ற சங்கம்' சார்பில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், நாமக்கல்-துறையூர் சாலை, திருச்சி சாலை,

நாமக்கல்: நாமக்கல்லில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளியவர்களுக்கு திருநங்கைகள் சார்பில் உணவு வழங்கப்பட்டது. நாமக்கல் நகரில் செயல்படும், 'இதயம் திருநங்கைகள் முன்னேற்ற சங்கம்' சார்பில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், நாமக்கல்-துறையூர் சாலை, திருச்சி சாலை, மோகனூர் சாலை, பரமத்தி சாலை, பூங்கா சாலை, சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை, சேந்தமங்கலம் சாலை, உள்ளிட்ட சாலைகளிலும், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வசிக்கும், 150 ஆதவரவற்ற ஏழை, எளியவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வடிவம்மா, தலைவர் சிம்ரன், செயலாளர் சுந்தரி, உள்ளிட்ட, 15 பேர் கொண்ட குழுவினர் இப்பணியை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X