பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் வரத்து அடிப்படையில் தடுப்பணையில் மின் உற்பத்தி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
பள்ளிபாளையம்: காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அடிப்படையில், ஓடப்பள்ளி தடுப்பணையில் மின் உற்பத்தி நடந்து வருகிறது. பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியில் காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டு, ஒன்பது மீ., உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, 2011ல் இருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும் போதும், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போதும்,

பள்ளிபாளையம்: காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அடிப்படையில், ஓடப்பள்ளி தடுப்பணையில் மின் உற்பத்தி நடந்து வருகிறது. பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியில் காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டு, ஒன்பது மீ., உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, 2011ல் இருந்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும் போதும், டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போதும், மின் உற்பத்தி நடக்கும். மற்ற நேரங்களில் தண்ணீர் வரத்தை பொறுத்து, மின் உற்பத்தி ஏற்றம், இறக்கமாக இருக்கும். ஆண்டு தோறும், கோடைகாலத்தில் தண்ணீர் வரத்து அடிப்படையில் தடுப்பணையில் குடிநீருக்கு மட்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, மின் உற்பத்தி நடக்கும். இதுகுறித்து, தடுப்பணை அதிகாரிகள் கூறுகையில், 'ஓடப்பள்ளி தடுப்பணையில் தற்போது, 5 மெகவாட் மின் உற்பத்தி நடக்கிறது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, இன்னும் கூடுதலாக மின் உற்பத்தி செய்யப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X