பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் மொபைல் வேன் மூலம் பரிசோதனை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
நாமக்கல்: கட்டுப்பாட்டு மண்டலங்களில் மொபைல் வேன் மூலம் கொரோனா பரிசோதனை நடந்தது.நாமக்கல் நகரில், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு முழு நேர கண்காணிப்பில் உள்ளது. இந்நிலையில் எர்ணாபுரம் ஆரம்ப

நாமக்கல்: கட்டுப்பாட்டு மண்டலங்களில் மொபைல் வேன் மூலம் கொரோனா பரிசோதனை நடந்தது.


நாமக்கல் நகரில், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டு முழு நேர கண்காணிப்பில் உள்ளது. இந்நிலையில் எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி நிர்வாகம் சார்பில் மொபைல் வாகனம் மூலம் கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், சுகாதார அலுவலர் சுகவனம், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் கொரோனா பரிசோதனை நடந்தது.

இதுகுறித்து, கமிஷனர் பொன்னம்பலம் கூறியதாவது: நாமக்கல் நகராட்சி பகுதியில், 13 கட்டுப்பாட்டு மண்டலங்களில், நோய் தொற்றுள்ள நபர்களின் தொடர்புடைய நபர்களுக்கு கொரோனா நோய் தொற்றுள்ளதா என, அவர்களது இடத்திற்கே சென்று பரிசோதனை செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ராமாபுரம் புதூரில் பணி துவங்கியுள்ளது. ஆரம்ப நிலையிலேயே கொரோனா நோய் தொற்று கண்டறிந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது ஏதுவாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X