பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ உபகரணங்கள் எம்.எல்.ஏ., வழங்கல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
எருமப்பட்டி: எருமப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், கொரொனா தொற்று பரவல் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி தலைமை வகித்தார். ஒன்றியத்தில் உள்ள, 24 ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.எம்.எல்.ஏ., பொன்னுசாமி பேசியதாவது: கொரோனா தொற்று காலம் என்பதால் ஒவ்வொரு

எருமப்பட்டி: எருமப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில், கொரொனா தொற்று பரவல் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சேந்தமங்கலம் எம்.எல்.ஏ., பொன்னுசாமி தலைமை வகித்தார். ஒன்றியத்தில் உள்ள, 24 ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏ., பொன்னுசாமி பேசியதாவது: கொரோனா தொற்று காலம் என்பதால் ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள தலைவர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முதலில் ஊராட்சி மன்ற தலைவர்களாகிய நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கிராமப்பகுதிகளில் உள்ள மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து தான் வெளியில் செல்ல வேண்டும். அனைத்து ஊராட்சிகளுக்கும் அனைத்து உதவிகளும் செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு, கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்களை எம்.எல்.ஏ., வழங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளாளன், குணாளன், ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விமலா சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X