பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரம் வேளாண் உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை: ராசிபுரம் வட்டாரத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டுநீர் பாசனம், மழைத்தூவான், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

ராசிபுரம்: ராசிபுரம் வேளாண் உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி வெளியிட்டுள்ள அறிக்கை: ராசிபுரம் வட்டாரத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டுநீர் பாசனம், மழைத்தூவான், தெளிப்பு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசனம் அமைப்பதன் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பில் சாகுபடி செய்ய முடியும். நீரின் பயன்பாட்டை குறைப்பதால் களை குறைந்து உரச்செலவும் குறைகிறது. நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ஆதார் எண், சிறு குறு விவசாயி சான்று, ரேஷன் கார்டு, மண் மற்றும் நீர் பரிசோதனை சான்று ஆகிய ஆவணங்களுடன் தங்கள் பகுதியின் உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X