சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா மதுபாட்டில் விற்பனை: 2 வாலிபர்கள் அதிரடி கைது

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
நாமக்கல்: தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாமக்கல் எஸ்.ஐ., சங்கீதா தலைமையில் போலீசார், நாமக்கல்-சேலம் சாலையில், நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை, 8:00 மணிக்கு, யுனிகான் பைக்கில் சாக்கு மூட்டையுடன், இரண்டு

நாமக்கல்: தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாமக்கல் எஸ்.ஐ., சங்கீதா தலைமையில் போலீசார், நாமக்கல்-சேலம் சாலையில், நேற்று, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை, 8:00 மணிக்கு, யுனிகான் பைக்கில் சாக்கு மூட்டையுடன், இரண்டு வாலிபர்கள் நின்று கொண்டிருந்ததை பார்த்தனர். போலீசாரை பார்த்ததும், அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தீவிர விசாரணையில், ராசிபுரம், பிலிப்பாக்குட்டையை சேர்ந்த, சங்கர், 29, நாமக்கல் ஆர்.பி.புதூரை சேர்ந்த, சக்திவேல், 28 என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையில், கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் வைத்து, விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 70 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X