சமுதாய கூடம் சிதிலம்; புதியது கட்டப்படுமா?

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மல்லசமுத்திரம்: பள்ளிப்பட்டியில், சிதிலமடைந்து காணப்படும் சமுதாய கூடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்லசமுத்திரம் ஒன்றியம், பள்ளிப்பட்டியில், 100க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் சமுதாய கூடம் கட்டப்பட்டது. அப்பகுதியினர், இல்ல நிகழ்ச்சிகளை

மல்லசமுத்திரம்: பள்ளிப்பட்டியில், சிதிலமடைந்து காணப்படும் சமுதாய கூடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்லசமுத்திரம் ஒன்றியம், பள்ளிப்பட்டியில், 100க்கும் அதிகமான குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், 25 ஆண்டுகளுக்கு முன் சமுதாய கூடம் கட்டப்பட்டது. அப்பகுதியினர், இல்ல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போதிய பராமரிப்பின்றி கட்டடம் சிதிலமடைந்து ஆங்காங்கே இடிந்துள்ளது. வேறுவழியின்றி, மல்லசமுத்திரம், திருச்செங்கோடு, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தனியார் மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இப்பகுதியினர் பெரும்பாலும் தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, சமுதாய கூடத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X