ஏரிச்சாலையில் முட்செடிகள் அகற்ற வேண்டுகோள்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் சின்ன ஏரிச்சாலையை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்ற, கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் சின்னஏரியில் இருந்து சின்னகொல்லப்பட்டிக்கு செல்லும் ஏரிச்சாலையின் வழியாக தினமும் ஏராளமான இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையை ஒட்டி, அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளன. இதனால், எதிரெதிரே வரும் வாகனங்கள் செல்வதற்கு

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் சின்ன ஏரிச்சாலையை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்ற, கோரிக்கை எழுந்துள்ளது. மல்லசமுத்திரம் சின்னஏரியில் இருந்து சின்னகொல்லப்பட்டிக்கு செல்லும் ஏரிச்சாலையின் வழியாக தினமும் ஏராளமான இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையை ஒட்டி, அதிகளவில் முட்புதர்கள் முளைத்துள்ளன. இதனால், எதிரெதிரே வரும் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. ஒரு சில நாட்களில், விபத்துகள் ஏற்படுகின்றன. இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது முட்செடிகள் உரசி காயம் ஏற்படுகிறது. எனவே, சாலையோரத்தில் உள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X