பொது செய்தி

தமிழ்நாடு

முருங்கைக்காய் விளைச்சல் இல்லாததால் அதிர்ச்சி

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முருங்கைகாய் சாகுபடி செய்துள்ளனர். பருவநிலை மாறுபாட்டால் தற்போது முருங்கைக்காய் வரத்து குறைந்துவிட்டது. இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முருங்கைகாய் சாகுபடி செய்துள்ளனர். பருவநிலை மாறுபாட்டால் தற்போது முருங்கைக்காய் வரத்து குறைந்துவிட்டது. இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த காலங்களில் இதே சமயத்தில் முருங்கைக்காய், 90லிருந்து, 200 ரூபாய் வரை விலை ஏற்றத்துடன் விற்பனையானது. சில தினங்களுக்கு முன்பு சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் முருங்கை மரத்தில் இருந்த பூக்கள், பிஞ்சுகள் அனைத்தும் உதிர்ந்து விட்டன. தற்போது ஒரு கிலோ மர முருங்கை, 25 ரூபாய், செடிமுருங்கை, 40 ரூபாய், கருமுருங்கை, 60 ரூபாய்க்கும் விலை போகிறது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் கிலோவிற்கு, 20 ரூபாய் விலை அதிகரித்த நிலையில் முருங்கைக்காய் வரத்து இல்லாததால் பரிதவித்து வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X