பொது செய்தி

தமிழ்நாடு

மாயனூர் கதவணையில் மீன் பிடிக்கும் பணி தீவிரம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கரூர்: மாயனூர் கதவணையில், தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் மீன் பிடிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், மாயனூரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. அதில், மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானி சாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, கிளை வாய்க்கால்,

கரூர்: மாயனூர் கதவணையில், தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் மீன் பிடிக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், மாயனூரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்கும் வகையில் கதவணை கட்டப்பட்டுள்ளது. அதில், மேட்டூர் அணை, அமராவதி அணை, பவானி சாகர் அணை மற்றும் நொய்யல் ஆற்றில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு, கிளை வாய்க்கால், காவிரியாற்றில் பாசனத்துக்காக திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து மட்டும் குடிநீருக்காக வினாடிக்கு, 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மற்ற அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், மாயனூர் கதவணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் கதவணையில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வரும், 14 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மீன்களை வாங்க பொதுமக்கள், மாயனூர் கதவணைக்கு நாள்தோறும் செல்கின்றனர். கதவணையில், பிடிக்கப்படும் மீன்கள் உடனடியாக விற்பனையாகின்றன. மீன்களின் ரகத்தை பொறுத்து கிலோ, 50 முதல், 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X