பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கரூர்: 'கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, ஐந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன' என, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், நீதிபதியுமான கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று, இரண்டாவது அலையில், ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், குறிப்பாக ஆக்சிஜன்

கரூர்: 'கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, ஐந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன' என, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், நீதிபதியுமான கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்று, இரண்டாவது அலையில், ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், குறிப்பாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் பற்றாக்குறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சிங்கப்பூரில் வாழ்ந்து வரும், கரூர் மாவட்டம் பிச்சம்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன், ரங்கசாமி மற்றும் அவரது நண்பர்கள் வழங்கிய நிதியுதவியுடன், ஐந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஏற்பாடு செய்து, தோகைமலை, வெள்ளியணை, பஞ்சப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பயன்படுத்தி கொள்ள, கலெக்டரிடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X