ரயில்வே பாலத்தில் மேல்தளம் சேதம்

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கரூர்: மண்மங்கலம்- வாங்கல் இடையே கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் மேல் தளத்தில், பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. கரூர்-சேலம் இடையே அமைக்கப்பட்ட ரயில்வே இருப்பு பாதையில், கடந்த, 2013 முதல் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்போது, கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் இருந்து வாங்கல் பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கேத, 2013ல் ரயில்வே மேம்பாலம்

கரூர்: மண்மங்கலம்- வாங்கல் இடையே கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் மேல் தளத்தில், பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. கரூர்-சேலம் இடையே அமைக்கப்பட்ட ரயில்வே இருப்பு பாதையில், கடந்த, 2013 முதல் பயணிகள் ரயில், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அப்போது, கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் இருந்து வாங்கல் பகுதிக்கு செல்லும் சாலையின் குறுக்கேத, 2013ல் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. பாலத்தை, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பாலத்தின் மேல் தளத்தில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. சிமென்ட் கலவை உதிர்ந்து, ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகின்றன. பாலத்தின் மேல்தளத்தின் இணைப்புகளில் உள்ள, இரும்பு கம்பிகளும் பெயர்ந்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, மண்மங்கலம்- வாங்கல் இடையே கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தின் மேல் தளத்தில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சரி செய்ய, ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X