விரைவில் பருவமழை தொடக்கம்: மின் கம்பங்களை பராமரிக்க கோரிக்கை

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கரூர்: விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், சேதமடைந்த மின் கம்பங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.கரூர் மாவட்டத்தில் மின்வாரியம் சார்பில் வீடுகளுக்கு, இரண்டு லட்சத்து, 96 ஆயிரத்து, 457, தொழிற்சாலைகளுக்கு, 10 ஆயிரத்து, 834 என மொத்தம், மூன்று லட்சத்து, 7,291 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.

கரூர்: விரைவில் பருவமழை தொடங்க உள்ள நிலையில், சேதமடைந்த மின் கம்பங்களால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.


கரூர் மாவட்டத்தில் மின்வாரியம் சார்பில் வீடுகளுக்கு, இரண்டு லட்சத்து, 96 ஆயிரத்து, 457, தொழிற்சாலைகளுக்கு, 10 ஆயிரத்து, 834 என மொத்தம், மூன்று லட்சத்து, 7,291 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் மூலம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாயும் நிலையில் கம்பங்கள் உள்ளன. பருவமழை நெருங்கும் நிலையில், மின் விபத்தால் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது: வீடு, கடைகளுக்கு, 7.5 மீட்டர் முதல், 8 மீட்டர் உயரம், தொழிற்சாலைகள், துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் வழித்தடங்களுக்கு, 9 மீட்டர் உயரமுள்ள கம்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு மின் கம்பங்களில் ஆயுட்காலம் சராசரியாக, 17.5 ஆண்டுகள் ஆகும். ஆயுட்காலம் முடிந்த பெரும்பாலான மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதன் மேல் மின்சாரம் செல்லும் கம்பிகளும், அறுந்த விழும் வகையில், கீழே தொங்குகின்றன. பல மின் வினியோக பெட்டிகள், கதவு இல்லாமல் உள்ளன. மழை பெய்யும் போது, சேதமடைந்த சாதனங்களில் இருந்து ஏற்படும் மின் கசிவில் சிக்கி, மக்கள் உயிரிழக்கின்றனர். மேலும், மின்வாரியம் வாயிலாக தெரு விளக்குகளுக்கு தேவைப்படும் மின்சாரம் வழங்கப்படுகிறது. அங்கும், மின் வாரியம் நகராட்சி மின் சாதனங்களும் சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளன. அதில், கரூர் நகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை, காந்திகிராமம், கோவை சாலை, செங்குந்தபுரம், வடிவேல் நகர், வையாபுரி நகர் உட்பட பல்வேறு இடங்களில் மின் கம்பம் முற்றிலும் சேதமடைந்துள்ளன. மின் கம்பம் மற்றும் ஊழியர் பற்றாக்குறையால் உரிய நேரத்தில் மின் கம்பங்களை மாற்ற முடியவில்லை. ஆனால், ஏதாவது விபத்து ஏற்பட்டால், நாங்கள் பலிகடாக ஆக்கப்படுகிறோம். விரைவில், பருவமழை துவங்க உள்ளதால், சேதமடைந்த மின்கம்பங்களையும், சாதனங்களையும் மாற்ற மின்வாரியம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X