சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

தேர்ந்த அரசியல்வாதி!

Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேர்ந்த அரசியல்வாதி!'நீண்ட காலமாக வெளியுறவு துறை அதிகாரியாக பணியாற்றினாலும், சீக்கிரமே அரசியல் வித்தைகளை கற்று தேர்ந்து விட்டார்' என, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை பாராட்டுகின்றனர், பா.ஜ., தலைவர்கள். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில், வெளியுறவு துறை செயலராக பணியாற்றியவர் ஜெய்சங்கர். தமிழகத்தை பூர்வீகமாக உடைய இவருக்கு, சர்வதேச நாடுகளின்

 அக்கம் பக்கம்


தேர்ந்த அரசியல்வாதி!



'நீண்ட காலமாக வெளியுறவு துறை அதிகாரியாக பணியாற்றினாலும், சீக்கிரமே அரசியல் வித்தைகளை கற்று தேர்ந்து விட்டார்' என, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை பாராட்டுகின்றனர், பா.ஜ., தலைவர்கள். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய அரசில், வெளியுறவு துறை செயலராக பணியாற்றியவர் ஜெய்சங்கர். தமிழகத்தை பூர்வீகமாக உடைய இவருக்கு, சர்வதேச நாடுகளின் கொள்கைகள் எல்லாம் அத்துபடி.
இவரது சிறப்பான பணியை கவுரவிக்கும் வகையில், இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தபோது, ஜெய்சங்கரை வெளியுறவு துறை அமைச்சராக்கினார் மோடி.சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார் ஜெய்சங்கர். அப்போது, அந்த நாட்டின் ராணுவ அமைச்சர், வெளியுறவு அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட பலரை சந்தித்தார்.
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவரும், அமெரிக்க துணை அதிபருமான கமலா ஹாரிசை, ஜெய்சங்கர் சந்திக்கவில்லை. இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலாவை, ஜெய்சங்கர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. 'சில மாதங்களுக்கு முன் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது, இந்தியாவுக்கு எதிராக, கமலாவின் உறவினர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்; இதை கமலா கண்டிக்கவில்லை. இதை மனதில் வைத்து தான், கமலாவை சந்திப்பதை தவிர்த்து விட்டார் ஜெய்சங்கர்'
என்கின்றனர், டில்லியில் உள்ள அதிகாரிகள். பா.ஜ.,வினரோ, 'சபாஷ்... ஜெய்சங்கர் தேர்ந்த அரசியல்வாதியாக மாறிவிட்டார்' என்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai Ravi - Nellai,இந்தியா
11-ஜூன்-202110:48:32 IST Report Abuse
Nellai Ravi கமலா ஹாரிஸ் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர் இல்லை. அவர் தந்தை ஆப்ரிக்காவை, பூர்விகமாக கொண்டவர். தாயார் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர். பூர்விகம் தந்தை வழியே அமையும். அவரது பெயரில் தந்தையின் பெயரையே வைத்துகொண்டிருக்கிறார் என்பதை நினைவில் கொள்க. எனவே இந்தியாவை அவரது பூர்விகம் என்று எழுதாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X