சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி: தமிழகத்தில், சிமென்ட் விலை சில நாட்களில், மூட்டை, 370 ரூபாயில் இருந்து, 520 ரூபாயாக அதிகரித்திருக்கிறது; இது நியாயமற்றது. சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச விலையை, தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்.'டவுட்' தனபாலு: இப்படித் தான் கடந்த முறை, மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டது. கடைகள் நீண்ட காலம் திறக்காத நிலையில்,

'டவுட்' தனபாலு


பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி:

தமிழகத்தில், சிமென்ட் விலை சில நாட்களில், மூட்டை, 370 ரூபாயில் இருந்து, 520 ரூபாயாக அதிகரித்திருக்கிறது; இது நியாயமற்றது. சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச விலையை, தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: இப்படித் தான் கடந்த முறை, மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டது. கடைகள் நீண்ட காலம் திறக்காத நிலையில், திறந்த பின் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டன. அப்படி தான் இப்போது, சிமென்ட் விலையும் உள்ளது. இதை பார்க்கும் போது, சிமென்ட் சூத்திரதாரிகள், மத்திய - மாநில அரசுகளின் கண்களை கட்டி விட்டனரோ அல்லது அவர்களை அரசுகள் கண்டுகொள்ளவில்லையோ என்பன போன்ற, 'டவுட்'டுகள் மக்களுக்குவருகின்றன!


தமிழக பா.ஜ., தலைவர் முருகன்:
தி.மு.க., ஆட்சி அமைத்து, 30 நாட்கள் கடந்து விட்டன. தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது ஆட்சி அமைத்த பிறகு, அது குறித்து வாய் திறக்கவே மறுக்கிறது. வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

'டவுட்' தனபாலு: நடிகர் கமல் கட்சியின் தேர்தல் அறிக்கையை பார்த்து, பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தி.மு.க.,வும் அறிவித்து விட்டது. இப்போது ஆட்சிக்கு வந்து விட்ட நிலையில், அந்த அறிவிப்பு நிறைவேற்றப்படுவது, 'டவுட்' தான். ஏனெனில் அந்த அளவுக்கு, அரசிடம் பணமில்லை; நிதி நிலைமை மோசம்!


தமிழக பா.ஜ., ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத்:
சென்னை, வடபழநி கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் நிலம் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும், கோவில் சொத்துக்களை கண்டறிந்து மீட்க, ஒரு சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கு வரும் போதும், இதுபோல பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன; வந்த வேகத்தில், துரிதமாக நடந்த வேலைகள், பின் மந்தமாகி போய் விட்டன. அந்த மந்தநிலைக்கு என்ன காரணமோ என்பது தான், இப்போது வரை பலருக்கும், 'டவுட்'டாக உள்ளது!

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skandh - Chennai,இந்தியா
11-ஜூன்-202120:04:00 IST Report Abuse
skandh காரோண பாதிப்பு , இறப்பு போல வடபழனி கோவில் சொத்து மீட்பும் ஒரு கப்ஸாவாமே . சொல்லப்பட்ட சொத்துக்கள் எல்லாமே வடபழனி கோவில் பேரில் தான் இருக்காமே . ஆனால் அங்கு இருந்த CAR பார்க்கிங்கை எடுத்துவிட்டார்களாம் . இதுதான் மீட்பாமே . இதை தினமலர் ஆராய்ந்து போடவேண்டும் . இல்லாவிட்டால் சேகர்பாபு இன்னும் அதிகமாக பொய்யரையே சொல்லிக்கொண்டிருப்பார் . DINAMALAR செய்யுமா ?
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
11-ஜூன்-202119:38:09 IST Report Abuse
Krishnamurthy Venkatesan தேர்தலில் வாக்குறுதி கொடுத்தால் அத நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. பெண்களுக்கு ரூபாய் .ஆயிரம் கொடுப்பதாக சொன்னதை நிதி நிலைமை அறிந்து செயல் படுத்துங்கள் என திரு. முருகன் ,பாஜக தலைவர் சொல்லியிருப்பாரேயானால் பாராட்டுக்குரியவர்.
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
11-ஜூன்-202115:57:52 IST Report Abuse
Dr. Suriya "தி.மு.க., ஆட்சி அமைத்து, 30 நாட்கள் கடந்து விட்டன. தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு, மாதம் 1,000 ரூபாய் அளிப்பதாக வாக்குறுதி அளித்தது.".... கவலை படாதீங்க அடுத்த அரசு அவங்க அரசா இருந்த அரியர்சா தருவோமுன்னு நினைக்கிறார்களோ என்னவோ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X