சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எதற்கு?

Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எதற்கு?கே.என்.ரமணி, துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசின், பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு, 'நீட்' தேர்வு பற்றிய விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.மருத்துவ பட்டதாரிகள் அனைவருமே, மிக்க திறமை வாய்ந்தவர்களாக இருப்பதே சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்.ஆனால், தகுதியில்லாத பலரும் பணம்


டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எதற்கு?கே.என்.ரமணி, துடியலுார், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசின், பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு, 'நீட்' தேர்வு பற்றிய விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.மருத்துவ பட்டதாரிகள் அனைவருமே, மிக்க திறமை வாய்ந்தவர்களாக இருப்பதே சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்.ஆனால், தகுதியில்லாத பலரும் பணம் கொடுத்து, தனியார் கல்லுாரியில் மருத்துவ படிப்பில் சேர்ந்து, டாக்டர் பட்டம் பெற்று, மக்கள் உயிருடன் விளையாடும் நிலையை மாற்றவே, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது.
நீட் தேர்வு, சமூக நீதிக்கு எதிரானது எனில், மற்ற மாநிலங்களில் ஏன் எதிர்ப்பு கிளம்பவில்லை?ராணுவத்தில் பணிபுரிய, பிளஸ் 2 முடித்த பின், 'நேஷனல் டிபன்ஸ் அகாடமி'யில் கடினமான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதை ரத்து செய்ய, எந்த அரசியல் கட்சியும் கேட்காது. ஏனெனில், இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம்.இது போலவே மக்களின் உயிரை காப்பாற்றும் டாக்டர் பொறுப்பும். அதனால் தான், நுழைவுத் தேர்வு அவசியமாகிறது.தமிழக அரசு துறைகளில், சாதாரண எழுத்தர் பணிக்கு கூட, டி.என்.பி.எஸ்.சி., நுழைவுத் தேர்வு நடத்தி, தரவரிசைப்படி தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இதை ஏன் நடத்த வேண்டும். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யலாமே. இதை, தமிழக அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை?நீட் தேர்வை எதிர்க்கும் அரசியல்வாதிகளே... உங்களை பொறுத்தவரையில், எழுத்தர் பணியை விட, மக்கள் உயிரை காப்பாற்றும் மருத்துவம் மிக எளிதான பணியோ?


'நீட்' தேர்வால் என்ன பாதிப்பு?ஆர்.கே.செந்தில்குமார், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீட்' மருத்துவ நுழைவுத்தேர்வால் ஏற்படும் பாதிப்பு, அதை சரிசெய்யும் வழிமுறைகளை, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு முறையால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.நீட் தேர்வு வருவதற்கு முன், எத்தனை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மருத்துவம் படித்தனர் என்பதை, ஸ்டாலின் கூற முடியுமா? அதன் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தை தாண்டாது. அனிதா மரணம், தரமற்ற கல்வியால் ஏற்பட்டது. 10 ஆண்டுகளாக, பிளஸ் 2 பாடத்திட்டத்தை மாற்றம் செய்யாமல், கல்வித்துறையை சேர்ந்தோர் தின்று கொழுக்க மட்டுமே, மக்களின் நிதி வீணாக்கப்பட்டது. மாற்றப்படாத பாடத் திட்டத்தில், நீட் தேர்வில், 50 சதவீதத்திற்கும் குறைவான கேள்விகளே வந்ததால், மாநில பாடத்திட்டத்தில் படித்தோர் திணறினர்.அதன்பின், அ.தி.மு.க., அரசு, பாடத்திட்டத்தை மாற்றியது. நீட் தேர்வில் இந்த முறை, 94 சதவீத கேள்விகள், நம் மாநில பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டன.அதைத் தொடர்ந்து, அப்போதைய முதல்வர், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதால், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு பிரகாசமானது.நீட் தேர்வை ரத்து செய்தால், அரசு பள்ளி மாணவர்கள் எப்படி மருத்துவம் படிப்பர்?நீட் தேர்வை ரத்து செய்தால், வழக்கம்போல வசதியானோர், கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை கொடுத்து, தகுதியில்லாத பிள்ளைக்கு, மருத்துவம் படிக்க 'சீட்' வாங்கி கொடுப்பர்.
'ஜஸ்ட் பாஸ்' செய்த, கற்றல் திறன் குறைந்த மாணவர்கள், இட ஒதுக்கீடு என்ற பெயரில் மருத்துவம் படித்து, மக்களின் உயிருடன் விளையாடுவர்.நீட் தேர்வை ரத்து செய்தால், ஏழை மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது எட்டாக் கனியாகி விடும். அதைத் தான், தி.மு.க., அரசு விரும்புகிறதா?


பயனாளியிடம் கையெழுத்து வாங்குங்கள்!டி.வி.கார்த்திகேயன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தகுதியில்லாதவருக்கு கிடைக்கும் சலுகையால், தகுதியான நபர் பாதிக்கப்படுகிறார் என்பதை, அரசு உணர வேண்டும்.தமிழகத்தில், அரிசி ரேஷன் கார்டுக்கு, அரசின் அனைத்து இலவசங்களும் வழங்கப்படுகின்றன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவில் வசிப்பவர் கூட, அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கிறார்; அரசின் இலவசங்களை வாங்கிச்செல்கின்றனர்.வசதியானோர் பெறும் மானியத்தையும், இலவசத்தையும் தடுக்க வேண்டும். அப்போது தான், நலத்திட்டத்தின் நோக்கம் நிறைவேறும்.தற்போது உள்ள ரேஷன் கார்டுகள், 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கப்பட்டவை. வசதி மிக்கோர் பலர், மாதம் 5,000 ரூபாய்க்கு கீழ் தான் வருமானம் என குறிப்பிட்டு, அரிசி ரேஷன் கார்டு பெற்றனர்.இப்போது ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் நபர்களும், நேர்மையாக வருமானத்தை குறிப்பிடுவதில்லை.எனவே அரசு, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளோருக்கு இலவசம், நிவாரண தொகை வழங்கும்போது, குடும்ப தலைவரிடம் இருந்து, ஒரு சுய அறிவிப்பு படிவத்தில் கையெழுத்து பெற வேண்டும்.அதில், 'என் குடும்பத்தின் மாத வருமானம், 5,000 ரூபாய்க்கு கீழ் என உறுதி அளிக்கிறேன். இது தவறு என நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையோ விதிக்கப்படலாம் என்பதை, நான் அறிவேன்' எனக் குறிப்பிட வேண்டும்.தகுதியில்லாதவர், அரசின் உதவித்தொகை பெற்றால், அது குறித்து புகார் அளிப்பவருக்கு, 500 ரூபாய் அன்பளிப்பு அளிக்கப்படும். புகார் அளிப்பவரின் பெயர் உள்ளிட்டவை ரகசியம் காக்கப்படும் என்றும்
அறிவிப்பு வெளியிடலாம்.இப்படி செய்தால், ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட புகார்கள் குவியும். தகுதியில்லாத நபர்களை கண்டறிந்து, எளிதாக நீக்கிவிடலாம். இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான ரூபாய் அரசு பணம் மிச்சமாகும். தகுதியானோர் அனைவருக்கும், அரசின் நலத்திட்டம் சென்றடையும்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
11-ஜூன்-202116:04:19 IST Report Abuse
Dr. Suriya என்ன பண்றது அம்மா ... ஓய்வு ஊதியம் பெறுபவர்களிடமும் வரி வசூலிக்கிறார்கள் அதான்......
Rate this:
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
11-ஜூன்-202116:02:24 IST Report Abuse
Dr. Suriya "பயனாளியிடம் கையெழுத்து வாங்குங்கள்"... கையெழுத்து, கைநாட்டு என்பது தில்லு முல்லுகளுக்கு கைவந்த கலை..... 3கோடி வேண்டுமா 8 கோடி வேண்டுமா. .... கவர்னரிடம் கொடுத்ததை போல கொடுப்பார்கள்....
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
11-ஜூன்-202110:43:31 IST Report Abuse
chennai sivakumar Ration கார்டு யோசனை மிக நல்லது. உங்கள் யோசனையை நிறைவேற்றினால் சென்னையில் தற்போது இருக்கும் கார்டுகளில் எண்ணிக்கை 90 சதவீதம் நிச்சயம் காணாமல் போகும். மீதி உள்ள கார்டுகளுக்கு இப்போது உள்ள கடைகளில் 5 இல் ஒரு பகுதி மட்டுமே தேவை. பொறுத்து இருந்து பார்ப்போம் முதல்வர் என்ன செய்கிறார் என்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X