பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
ஜூன் 11, 1930ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், 1930, ஜூன் 11ம் தேதி பிறந்தவர் ஏ.சி.திருலோகசந்தர். இளம் வயதிலேயே சினிமா துறையில் உதவி இயக்குனராக நுழைந்தார். இவர் இயக்கிய, வாளும் விழியும் என்ற முதல் படம் வெளிவரவே இல்லை. ஆனாலும், மனம் தளராமல் போராடி, வீரத்திருமகன், நானும் ஒரு பெண், அதே கண்கள், ராமு, எங்க மாமா என, பல வெற்றி படங்களை கொடுத்தார்.ஏ.வி.எம்., நிறுவனத்தின் செல்ல


இதே நாளில் அன்று


ஜூன் 11, 1930



ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், 1930, ஜூன் 11ம் தேதி பிறந்தவர் ஏ.சி.திருலோகசந்தர். இளம் வயதிலேயே சினிமா துறையில் உதவி இயக்குனராக நுழைந்தார். இவர் இயக்கிய, வாளும் விழியும் என்ற முதல் படம் வெளிவரவே இல்லை. ஆனாலும், மனம் தளராமல் போராடி, வீரத்திருமகன், நானும் ஒரு பெண், அதே கண்கள், ராமு, எங்க மாமா என, பல வெற்றி படங்களை கொடுத்தார்.ஏ.வி.எம்., நிறுவனத்தின் செல்ல இயக்குனராக இருந்தார்.

நடிகர் சிவாஜிகணேசனுடன் இணைந்து, 25 படங்கள் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆருடன் இணைந்து, அன்பே வா படத்தை இயக்கினார்.இவர் இயக்கிய தெய்வமகன், 'ஆஸ்கர்' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் படம் என, பெருமை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில், 65 படங்களை இயக்கியுள்ளார். 2016, ஜூன் 15ம் தேதி, தன் 86வது வயதில்

காலமானார்.இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X