அடுக்குமாடி கட்டடம் இடிந்து மும்பையில் 11 பேர் பலி

Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை:மும்பையில், அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், எட்டு குழந்தைகள் உட்பட, 11 பேர் உயிரிழந்தனர்.மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், நியூ கலெக்டர் காம்பவுண்ட் என்ற மூன்று மாடி குடியிருப்பு உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, இந்த கட்டடத்தின் மூன்று மற்றும் இரண்டாவது தளங்கள் திடீரென இடிந்து விழுந்தன.இந்தக் கோர விபத்தில் எட்டு குழந்தைகள் உட்பட, 11 பேர் உடல்
 அடுக்குமாடி கட்டடம் இடிந்து மும்பையில் 11 பேர் பலி

மும்பை:மும்பையில், அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், எட்டு குழந்தைகள் உட்பட, 11 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், நியூ கலெக்டர் காம்பவுண்ட் என்ற மூன்று மாடி குடியிருப்பு உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, இந்த கட்டடத்தின் மூன்று மற்றும் இரண்டாவது தளங்கள் திடீரென இடிந்து விழுந்தன.இந்தக் கோர விபத்தில் எட்டு குழந்தைகள் உட்பட, 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கித் தவித்த ஏழு பேர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மும்பை போலீஸ் இணை கமிஷனர் விஸ்வாஸ் நங்ரே பாட்டீல் கூறியதாவது:இந்த கட்டடம் மாநக ராட்சி அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் மும்பையை புயல் தாக்கிய போதே, இந்த கட்டடத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அப்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம். கட்டட உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு மத்திய - மாநில அரசுகள் நிவாரண தொகை அளித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijaya Raghav - chennai,இந்தியா
11-ஜூன்-202112:20:19 IST Report Abuse
Vijaya Raghav கட்டிட்ட உரிமையாளர் முஸ்லிமாக இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். வாக்குகள் அள்ள முடியாது
Rate this:
Cancel
குசு அய்யர் - Chennai ,இந்தியா
11-ஜூன்-202106:15:47 IST Report Abuse
குசு அய்யர் கார்பொரேஷன் அதிகாரிகள் மான்சூனுக்கு முன்னால் அபாய நிலையில் இருக்கும் கட்டிடங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து அதில் வசிப்பவர்களை வெளியேற்றிருக்க வேண்டாமா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X