பொய் சொன்னாரா? நஸ்ரத் ஜஹானுக்கு சிக்கல்!

Added : ஜூன் 10, 2021
Share
Advertisement
கோல்கட்டா:''திருமணமானதாக, திரிணமுல்காங்., - எம்.பி.,யான பிரபல நடிகை நஸ்ரத் ஜஹான், பார்லி.,யில் பொய் சொன்னாரா,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, அமித் மால்வியா கேள்வி எழுப்பி உள்ளார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. பெங்காலி மொழி நடிகையான நஸ்ரத் ஜஹான், திரிணமுல் காங்., - எம்.பி.,யாகவும் உள்ளார். கடந்த 2019ல், லோக்சபா தேர்தலில் வென்ற
 பொய் சொன்னாரா? நஸ்ரத் ஜஹானுக்கு சிக்கல்!

கோல்கட்டா:''திருமணமானதாக, திரிணமுல்காங்., - எம்.பி.,யான பிரபல நடிகை நஸ்ரத் ஜஹான், பார்லி.,யில் பொய் சொன்னாரா,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, அமித் மால்வியா கேள்வி எழுப்பி உள்ளார்.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. பெங்காலி மொழி நடிகையான நஸ்ரத் ஜஹான், திரிணமுல் காங்., - எம்.பி.,யாகவும் உள்ளார். கடந்த 2019ல், லோக்சபா தேர்தலில் வென்ற நிலையில், தொழிலதிபர் நிகில் ஜெயினை திருமணம் செய்தார் ஜஹான்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், 'எங்கள் திருமணம், மேற்காசிய நாடான துருக்கியில் நடந்தது.இருவரும் வேற்று மதத்தை சேர்ந்தவர்கள். சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு செய்தால் மட்டுமே, இந்தியாவில் இந்தத் திருமணம் செல்லுபடியாகும். நாங்கள் பதிவு செய்யவில்லை; அதனால் என் திருமணம் செல்லாது' என்றார்.

இது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த அமித் மால்வியா கூறியுள்ளதாவது:அவர் நடிகையாக மட்டுமே இருந்தால், அவரது திருமண விவகாரம் குறித்து யாரும் கவலைப்பட போவதில்லை. ஆனால் அவர், எம்.பி.,யாகவும் உள்ளார்.தனக்கு திருமணமானதாக, பார்லி.,யில் அவர் கூறியுள்ளார். ஆனால் தற்போது தன் திருமணம் சட்டப்படி செல்லாது என கூறியுள்ளார். அப்படியானால், பார்லி.,யில் அவர் பொய் கூறினாரா.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X