பொது செய்தி

இந்தியா

நாளை ஜி.எஸ்.டி., கவுன்சில் தடுப்பூசி வரி குறையுமா?

Updated : ஜூன் 12, 2021 | Added : ஜூன் 10, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி:தடுப்பூசி மருந்துக்கு வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக, நாளை, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூடுகிறது. கடந்த மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 43வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடந்தது.இதில் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு காலதாமத கணக்கு தாக்கலுக்கான கட்டணக் குறைப்பு, கறுப்பு பூஞ்சை நோய்க்கான, 'ஆம்போடெரிசின் - பி' உட்பட பல
 ஜி.எஸ்.டி., கவுன்சில் , தடுப்பூசி,வரி குறையுமா?

புதுடில்லி:தடுப்பூசி மருந்துக்கு வரி குறைப்பு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக, நாளை, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூடுகிறது. கடந்த மாதம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 43வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடந்தது.

இதில் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு காலதாமத கணக்கு தாக்கலுக்கான கட்டணக் குறைப்பு, கறுப்பு பூஞ்சை நோய்க்கான, 'ஆம்போடெரிசின் - பி' உட்பட பல மருந்துகள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. எனினும், கொரோனா தடுப்பூசி மருந்திற்கான, 5 சதவீத ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் செய்யப்படவில்லை.

ஆனாலும் தடுப்பூசி மருந்து, கொரோனா சிகிச்சை மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், முக கவசம், பாதுகாப்பு உடைகள் உள்ளிட்டவற்றுக்கான வரியை குறைப்பது குறித்து ஆய்வு செய்ய, குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, வரி குறைப்பு தொடர்பான பரிந்துரையை, சமீபத்தில் நிதியமைச்சகத்திடம் அளித்துள்ளது.

இதையடுத்து, அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44வது ஜி.எஸ்.டி., கூட்டம் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நாளை நடக்கஉள்ளது. மாநில நிதியமைச்சர்கள்,யூனியன் பிரதேசபிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இக்கூட்டத்தில், தடுப்பூசி மருந்து உட்பட கொரோனா சிகிச்சை சார்ந்த பொருட்களுக்கான வரி குறைப்பு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
11-ஜூன்-202117:49:03 IST Report Abuse
Rajas முதலில் 28 % வரியை குறையுங்கள். பல தொழில்கள் நாசமாகி விட்டன. 100 CC டூவீலர்களுக்கு GST 12 % என்று கொண்டு வந்தால் சிறு வியாபாரிகள், விவசாயிகள் பலன் பெறுவார்கள். பெட்ரோல் உபயோகமும் இது போன்ற சிறு வண்டிகளால் குறையும்.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
11-ஜூன்-202115:53:52 IST Report Abuse
sahayadhas தடுப்பூசிக்கு GST பற்றி யோசிக்கும் அரசு இனி ஹிந்துகளுக்கு என்ன சலுகை செய்யும் என்று எதிர்பார்கிறீர்கள். . வரிசையில் நின்று 1 முழம் கயிறு வாங்கிட்டு போங்க அனைவரும் .
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
11-ஜூன்-202114:14:05 IST Report Abuse
sahayadhas அடேய் , வாங்களித்து முடுஞ்சாச்சு பையா, தூங்கியா எழும்புன குமாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X